”எனக்கு இப்போதான் தெரியவந்தது” - ரசிகரை பாதுகாவலர் தள்ளிவிட்ட விவகாரம்.. மன்னிப்பு கேட்ட நாகார்ஜுனா!

தன்னைச் சந்திக்க வந்த ரசிகரை பாதுகாவலர் தள்ளிவிட்ட விவகாரத்தில், நடிகர் நாகார்ஜுனா மன்னிப்பு கோரியுள்ளார்.
நாகார்ஜுனா
நாகார்ஜுனாஎக்ஸ் தளம்

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நாகார்ஜுனா. இவர் தமிழிலும் பல படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது நடிகர் தனுஷ் நடிக்கும் ’குபேரா’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படப்பிடிப்புக்காக நடிகர் தனுஷுடன் ஹைதராபாத் விமான நிலையத்தில் இருந்து வெளியூருக்குச் செல்ல புறப்பட்டார்.

அப்போது நாகார்ஜுனா விமான நிலையத்திற்குள் நுழைந்தபோது, விமான நிலைய ஊழியர் ஒருவர் நாகார்ஜுனா அருகே வந்து அவரை சந்திக்க முயன்றார். ஆனால், நாகார்ஜுனாவின் பாதுகாவலர் அந்த நபரை பிடித்து தள்ளிவிட்டார். இதனை நடிகர் நாகார்ஜுனா மற்றும் தனுஷ் ஆகியோர் கண்டுகொள்ளாமல் அங்கிருந்து சென்றதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன.

இதையும் படிக்க: கனடா| பகுதி நேர வேலைக்காக காஃபி ஷாப் முன்பு நீண்ட வரிசையில் காத்திருக்கும் வெளிநாட்டு மாணவர்கள்!

நாகார்ஜுனா
சமந்தா- நாக சைதன்யா விவாகரத்து குறித்து வெளியான செய்தி - நாகார்ஜுனா காட்டம்

இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவியது. மேலும் நடிகர் நாகார்ஜுனா மற்றும் தனுஷின் செயலுக்கு ரசிகர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்தனர். இந்த நிலையில், அந்த வீடியோ வைரலானதை அறிந்த நாகார்ஜுனா தற்போது மன்னிப்பு கேட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ”அங்கே என்ன நடந்தது என்பது எனக்குத் தெரியாது. இப்படி நடந்திருக்கக் கூடாது. நான் அந்த நபரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இதுபோல எதிர்காலத்தில் நடக்காதவாறு பார்த்துக் கொள்கிறேன்” என அதில் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க: தொடர் தோல்வி|Match Fixing நடந்ததா? பாபர் அசாம் சொத்து சேர்த்தது எப்படி? பாக். செய்தியாளர் கேள்வி?

நாகார்ஜுனா
நடிகர் நாகார்ஜுனா பண்ணை வீட்டில் எலும்பு கூடு: அடையாளம் தெரிந்தது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com