தொடர் தோல்வி|Match Fixing நடந்ததா? பாபர் அசாம் சொத்து சேர்த்தது எப்படி? பாக். செய்தியாளர் கேள்வி?

பாகிஸ்தான் அணி வீரர்கள் ஏதேனும் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டிருப்பார்களோ என்ற விமர்சனங்களும் எழுந்து வருகின்றன.
pakistan
pakistanx page

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெறாத பாகிஸ்தான் அணி, தொடரிலிருந்து வெளியேறியது. இதனால், அவ்வணி மீது நிறைய விமர்சனம் கிளம்பியுள்ளது. குறிப்பாக, அவ்வணியின் பயிற்சியாளரான கேரி கிறிஸ்டனே அணியை கடுமையாக சாடியிருந்தது கிரிக்கெட் உலகில் பேசுபொருளானது.

இதையடுத்து, டி20 உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக செயல்படாத வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் முனைப்பில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உள்ளது. இதனால், கேப்டன் பாபர் அசாம், இமான் வாசிம், அசாம் கான், சதாப் கான் மற்றும் ஹரிஷ் ரவுப் ஆகிய ஐந்து வீரர்கள் மட்டும் பாகிஸ்தானுக்கு செல்லாமல் லண்டன் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் பாகிஸ்தான் அணி வீரர்கள் ஏதேனும் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டிருப்பார்களோ என்ற விமர்சனங்களும் எழுந்து வருகின்றன. உலகக்கோப்பையில் பங்கேற்றிருந்த பாகிஸ்தான் அணியின் பெரும்பாலான போட்டிகள் அமெரிக்காவிலேயே நடைபெற்றது. இந்தப் போட்டியைக் காண்பதற்கு அந்த அணி வீரர்களும் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

அந்த வகையில், பாகிஸ்தான் அணியில் 15 வீரர்கள், கூடுதலாக 4 ரிசர்வ் வீரர்கள், அணி பயிற்சியாளர், மருத்துவர் என மொத்தமே 34 பேர்கள்தான் இருக்கிறார்கள். இதில் ஓர் அறைக்கு இரண்டு பேர் என்றாலே மொத்தமாகவே 17 ரூம்கள் தான் தேவைப்படும். ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சார்பாக ஒவ்வொரு ஹோட்டலிலும் 60 ரூம்கள் புக் செய்யப்பட்டு இருப்பதுதான் தற்போது சர்ச்சை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் பாகிஸ்தான் அணி வீரர்கள் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டிருக்கலாம் என்கிற தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிக்க: AI அழகிப்போட்டி.. Top 10 இடங்களில் இந்திய AI அழகி.. உலகைக் கவரும் சாரா சதாவரி யார்?

pakistan
T20 WC | வெளியேறிய பாகிஸ்தான்.. நாடு திரும்ப அச்சம்.. ஒரு மாதத்திற்கு எஸ்கேப் ஆகும் 5 வீரர்கள்!

இந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் கடந்த சில ஆண்டுகளில் பல கோடிக்கு சொத்துகளை வாங்கிக் குவித்திருப்பதாகவும், சமீபத்தில் அவரது சகோதரரே அவருக்கு ஆடி ஈ - டிரான் என்ற ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு கார் ஒன்றை பரிசளித்திருப்பதும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் பத்திரிகையாளர் முபாஷிர் லுக்மான் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாகிஸ்தான் அணி தொடர் தோல்வி அடைந்த நிலையில், பாபர் அசாம் சொத்து மதிப்பு ஏறி வருவதை அவர் சுட்டிக்காட்டி இருக்கிறார். மேலும் அவர், ’’இத்தனை சொத்துகள் பாபர் அசாமுக்கு எப்படி வந்தது? அவர் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபடுகிறாரா? அவர் சகோதரர் மூலமாக அவருக்கு யாரோ அந்த காரை பரிசு அளித்திருக்கலாம் என முபாஷிர் லுக்மான் குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

முபாஷிரின் இந்த குற்றச்சாட்டு, பாகிஸ்தான் கிரிக்கெட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. என்றாலும் இதுகுறித்து பதிலளித்த பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு, “கிரிக்கெட் தொடர்பான விமர்சனங்களை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், மேட்ச் பிக்ஸிங் போன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. இதுபோன்ற குற்றச்சாட்டுகளை எழுப்பியவர்கள் அதற்கான ஆதாரத்தை அளிக்க வேண்டும். ஆதாரங்களை அளிக்காவிட்டால் அவர்கள்மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளது.

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் தன்மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டை வைத்திருக்கும் பத்திரிகையாளருக்கு பாபர் அசாம் வக்கீல் நோட்டீஸ் அனுப்ப உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிக்க: கர்நாடகாவில் ரூ.1,400 கோடி முதலீடு.. இந்தியாவில் பிசினஸை தொடங்கும் முத்தையா முரளிதரன்!

pakistan
”நாங்கள் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம்..” - மறைமுகமாக ஹேரி கிறிஸ்டனுக்கு பதிலடி கொடுத்த பாக். வீரர்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com