Yuvan Shankar Raja
Yuvan Shankar RajaYuvan Shankar Raja

`The U1niverse Tour' யுவனின் இசை சுற்றுப்பயணம் | Yuvan Shankar Raja

யுவன் சங்கர் ராஜா தனது `The U1niverse Tour' என்ற இசை சுற்றுப்பயணத்தை சென்னையிலிருந்து உலக அரங்குகள் வரை நடத்த இருக்கிறார்.
Published on

இசை நிகழ்ச்சிகளுக்கு இப்போது நிறையவே வரவேற்பு கிடைக்கும் சூழல் உருவாகியிருக்கிறது. இந்தியாவுக்கு உள்ளே நடக்கும் கான்சர்ட் ஒருபுறம் என்றால் மற்ற நாடுகளில் நடக்கும் கான்சர்ட் இன்னொரு வகையில் கவர்கிறது.

பல இசையமைப்பாளர்கள் இதை செய்து வரும் சூழலில் யுவன் சங்கர் ராஜா தனது `The U1niverse Tour' என்ற இசைச் சுற்றுப்பயணத்தை சென்னையிலிருந்து உலக அரங்குகள் வரை நடத்த இருக்கிறார். டிசம்பர் 13ஆம் தேதி சென்னை நந்தனம் ஒய் எம் சி ஏ மைதானத்தில் துவங்குகிறது அவரின் இசை நிகழ்ச்சி. இதை தொடர்ந்து அவர் பாரீஸ், மலேசியா, துபாய் என பல்வேறு இடங்களில் இசை நிகழ்ச்சி நடத்த உள்ளார்.

Yuvan Shankar Raja
வரலாறு காணாத அடுத்தடுத்த உச்சம்.. கேட்டாலே ஷாக் அடிக்கும் தங்கம் விலை!

முதலில் டிக்கெட்டை முன் பதிவு செய்யும் ஆயிரம் பேருக்கு யுவன் கையொப்பமிட்ட டி-ஷர்ட் வழங்கப்படும் என்றும் 10 அதிர்ஷ்டசாலி ரசிகர்கள் இசையமைப்பாளருடன் செல்ஃபி எடுத்துக்கொள்ளும் வாய்ப்பைப் பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Yuvan Shankar Raja
மீண்டும் களம் காணும் அஸ்வின்.. BBL, ILT20-ல் இரண்டிலும் விளையாட உள்ளதாக தகவல்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com