’3 நாளில் 15 கோடி வசூல்..’ `கில்லி' ரெக்கார்டை உடைக்குமா `படையப்பா'? | Ghilli | Padayappa
ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு மறுவெளியீடு செய்யப்பட்ட 'படையப்பா' படம், முதல் மூன்று நாட்களில் 15 கோடி வசூலித்து, விஜயின் 'கில்லி' படத்தின் ரீரிலீஸ் ரெக்கார்டை முறியடிக்கும் வாய்ப்பை உருவாக்கி உள்ளது..
இந்திய சினிமா பொறுத்தவரை கடந்த சில வருடங்களாக ரீ ரிலீஸ் டிரெண்ட் பயங்கரமாக பரவி வருகிறது. அப்படி இந்த ஆண்டும் `சச்சின்', `குஷி', `ஃப்ரெண்ட்ஸ்', ஆட்டோகிராஃப் `நாயகன்', `அஞ்சான்', `பாகுபலி' எனப் பல படங்கள் வெளியானது. டிசம்பர் 12ஆம் தேதி ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு `படையப்பா' படம் மறுவெளியீடு செய்யப்பட்டது. வழக்கமாக ரீ ரிலீஸ் படங்களில் வெகு சில படங்களுக்கே பெரிய வரவேற்பு கிடைக்கும். அப்படி கடந்த ஆண்டு பெரிய அளவில் வரவேற்பை பெற்ற விஜயின் `கில்லி' படைத்தை போல, இந்த ஆண்டு ரீ ரிலீஸ் கோட்டாவில் ஹிட் அடித்திருக்கிறது ரஜினியின் `படையப்பா'.
பொதுவாக ஒவ்வொரு ஹீரோவின் சினிமா பயணத்திலும் சில படங்கள் அவர்களுக்கான அடையாளமாக மாறும், அவர்களின் திரைப்பயணத்தில் மைல் கல்லாக அமையும். அப்படி விஜய் நடித்த `கில்லி' அவரது திரைப்பயணத்தையே ஆக்ஷன் ரூட்டுக்கு மாற்றியதில் முக்கியமான படம். அதிக முறை தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பட்ட படமும் அதுவே. ஒவ்வொரு முறையும் TRPயில் டாப் இடத்தை பிடிக்கும். அப்படித்தான் ரஜினியின் `படையப்பா' படமும்.
சினிமாவில் ரஜினியின் 25வது ஆண்டின் போது அவர் உருவாக்கிய படம் `படையப்பா'. இப்படத்தின் பெரிய வெற்றி ரஜினியின் புகழை பெரிய அளவுக்கு கொண்டு சேர்த்தது. அதில் நடித்த நடிர்களின் புகழும் உயர்ந்தது. இந்த இரு படங்களும் எவர்-க்ரீன் என்பதால், எப்போதும் மக்கள் மத்தியில் இப்படங்கள் மீதான ஆவல் குறைந்ததே இல்லை. அதனால் தான் இரு படங்களும் ரீ ரிலீஸில் கூட பெரிய அளவில் வரவேற்பை பெற்றிருக்கின்றது.
இதுவரை ரீ ரிலீஸ் ஆனா படங்களில் இந்திய அளவில் மிகப்பெரிய வசூலை செய்தது விஜயின் `கில்லி' தான். ரீ ரிலீஸில் இப்படத்தின் மொத்த இந்திய வசூல் கிட்டத்தட்ட 20 கோடி. உலக அளவில் 32 கோடி வரை வசூலித்ததாக சொல்லப்படுகிறது. இப்போது இந்த ஆல் டைம் ரெக்கார்டை ரஜினியின் `படையப்பா' முறியடிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறகத்து. `படையப்பா' ரீ-ரிலீஸ் ஆகி முதல் மூன்று நாள் வசூல் கிட்டத்தட்ட 15கோடி என்கிறார்கள். விஜயின் `கில்லி' பட முதல் மூன்று நாள் வசூல் கிட்டத்தட்ட 10 கோடி. மேலும் படையப்பா படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பினாலும், புதிய படங்கள் எதுவும் வெளியாகவில்லை என்ற சூழலும் இருப்பதால் இந்த வசூல் பெரிய அளவில் வளரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே விரைவில் `கில்லி' ரெக்கார்டை `படையப்பா' முறியடிக்க நிறைய வாய்ப்பு உள்ளது.

