‘தளபதி 69’ படத்தை இயக்கப்போவது இவர்தானா? தீயாய் பரவும் தகவல்!

அரசியலில் களம்கண்டுள்ள நடிகர் விஜய்யின் இறுதிப்படமாக, தளபது 69 படம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், அத்திரைப்படத்தினை இயக்குநர் எச்.வினோத் இயக்குவார் என தகவல் வெளியாகியுள்ளது.
தளபதி 69’
தளபதி 69’முகநூல்

திரைத்துறையில் இளைய தளபதியாக இருந்து தளபதியாக வெற்றி கண்ட நடிகர் விஜய், சில மாதங்களுக்கு முன் திடீரென ‘தமிழக வெற்றிக்கழகம்’ என்ற அரசியல் கட்சியை உருவாக்கி அதில் உறுப்பினர்களை தீவிரமாக சேர்த்து வருகிறார். வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் களம் காண போவதாக அறிவித்து அதிரடியும் காண்பித்து இருக்கிறார் விஜய்.

இந்நிலையில் ‘இனிமேல் திரைப்படங்கள் நடிக்கப் போவதில்லை, தளபதி 69 படமே இறுதிப்படமாக இருக்கும்’ என விஜய் தெரிவித்திருந்தார். தளபதி 68-ஆக வெங்கட்பிரபு - விஜய் கூட்டணியில் G.O.A.T திரைப்படம் தயாராகி வருகிறது. இந்நிலையில், ’தளபதி 69’ திரைப்படத்தை குறித்த சில தகவல்கள் இணையத்தில் அவ்வபோது வைரலாகும்.

தளபதி 69’
”தமிழ்நாடும், கேரளாவும் எனக்கு இரண்டு கண்கள் மாதிரி..” - கேரள ரசிகர்கள் முன் எமோஷனலாக பேசிய விஜய்!

இதன்படி ‘தளபதி 69’ படத்தினை DVV என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் என்று சில தினங்களுக்கு முன்னர் தகவல் வெளியானது. இருப்பினும் அப்படத்தினை இயக்கப்போவது யார் என்ற கேள்விக்கு விடை கிடைக்கவில்லை. இதனால் இயக்குநர் தொடர்பான எதிர்ப்பார்ப்பு அதிகரித்து கொண்டே இருந்தது.

கார்த்திக் சுப்புராஜ், ஆர்.ஜே.பாலாஜி, வெற்றிமாறன் உள்ளிட்டோரில் யாரேனும் அப்படத்தினை இயக்குவர் என கூறப்பட்டு வந்தது. இந்தவரிசையில், தற்போது சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, துணிவு ஆகிய படங்களை இயக்கிய எச்.வினோத்தும் இணைந்துள்ளார்.

தளபதி 69
தளபதி 69

ஆனால் எச்.வினோத்தான் தளபதி 69 திரைப்படத்தினை நிச்சயம் இயக்குவார் என சொல்லப்படுகிறது. கமல்ஹாசனை வைத்து இவர் இயக்கவிருந்த ஒரு பொலிட்டிக்கல் கதையை விஜய்க்கு கூறியிருப்பதாகவும், விஜய் தற்சமயம் அதற்கு ஓகே சொல்லி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தளபதி 69’
பாஜகவை ஒதுக்கிவிட்டு திமுகவுக்கு குறி..விமர்சனத்தில் விஜய் கட்சியின் முதல் அரசியல் அறிக்கை! அடுத்து?

GOAT படத்தின் வேலைகள் முடிந்த பிறகு, தளபதி 69 திரைப்படத்தின் இயக்குநர் குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது. ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து, இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் தற்போது Goat திரைப்படத்தில் நடித்து வருகிறார். யுவன் சங்கர் ராஜா இதற்கு இசையமைக்கும் நிலையில் இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது படப்பிடிப்பு. விரைவில் இந்த வேலைகள் முடிந்து, அடுத்தப் படம் குறித்த அப்டேட் வெளியாகும் என கூறப்படுகிறது.

தளபதி 69’
‘பார்க்கிங்’ பிரச்னை... நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com