‘பார்க்கிங்’ பிரச்னை... நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு!

நடிகை சரண்யா, தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அவரது பக்கத்து வீட்டுக்காரர் காவல் நிலையத்தில் புகார். 'பார்க்கிங்' பிரச்னையில் நடிகை சரண்யா மற்றும் பக்கத்து வீட்டுக்காரர் மாறி மாறி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
Actress Saranya
Actress Saranyapt desk

செய்தியாளர்: ஜெ.அன்பரசன்

சென்னை விருகம்பாக்கம் பத்மாவதி நகரில் நடிகை சரண்யா பொன்வண்ணன் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது வீட்டருகே ஸ்ரீதேவி (43) என்பவர் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று மதியம் ஸ்ரீதேவி மருத்துவமனைக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து தனது காரை வெளியே எடுக்க முற்பட்டுள்ளார். அதற்காக வாசலில் உள்ள இரும்பு கேட்டை திறந்துள்ளார்.

Saranya
Saranyapt desk

அப்போது இரும்பு கேட் மோதி, சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நடிகை சரண்யா பொன்வண்ணனின் கார் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சரண்யா பொன்வண்ணன் நேராக ஸ்ரீதேவி வீட்டிற்குச் சென்று அவரை தகாத வார்த்தையால் திட்டி மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து ஸ்ரீதேவி, விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது புகார் அளித்ததன் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோல, நடிகர் சரண்யா பொன்வண்ணனின் காரை சேதப்படுத்தி தகாத வார்த்தைகளால் திட்டியதாக ஸ்ரீதேவி மற்றும் அவர் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் நடிகை சரண்யா சார்பாக அவரது கார் ஓட்டுநர் ஐயப்பன் என்பவர் புகார் அளித்துள்ளார். இருவரது புகாரின் பேரில் விருகம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com