Rajinikanth
RajinikanthJailer 2

`ஜெயிலர் 2' படப்பிடிப்பு எந்த நிலையில் உள்ளது? ரிலீஸ் எப்போது? | Jailer 2 | Rajinikanth

இப்போது படத்தில் ஷாருக்கான் சம்பந்தப்பட்ட காட்சிகள் ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இதற்காக 5 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளாராம் ஷாரூக்.
Published on

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கிவரும் `ஜெயிலர் 2' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு நடுவே உருவாகிவரும் இப்படத்தில் நிறைய நடிகர் பட்டாளமே இருக்கிறது. தற்போது இதில் மோகன்லால் சம்பந்தப்பட்ட காட்சிகள் முழுவதுமாக படமாக்கப்பட்டுவிட்டது என சொல்லப்படுகிறது.

Jailer 2
Jailer 2

இப்போது படத்தில் ஷாருக்கான் சம்பந்தப்பட்ட காட்சிகள் ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இதற்காக 5 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளாராம் ஷாரூக். படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ஷாரூக் உடன் ரஜினி இடம் பெரும் காட்சி ஒன்றும் உள்ளதாக தகவல். இப்படத்தில் ரிலீஸ் தேதி ஏப்ரல் 14ம் தேதி அறிவிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.

Rajinikanth
"தெலுங்கில் நானே டப்பிங் பேசினேன்; ஆனால்.." - பிரதீப் ரங்கநாதன் | Pradeep Ranganathan | LIK

அதன்படி `ஜெயிலர் 2' வெளியீடு ஆகஸ்ட் மாதம் இருக்கலாம் என சொல்லப்படுகிறது. ஜெயிலர் 2வுக்கு பிறகு சிபி சக்கரவர்த்தி இயக்கும் `தலைவர் 173' படப்பிடிப்பு ஏப்ரல் இறுதி வாரம் துவங்கவுள்ளது. இது பொங்கல் ரிலீஸ் ஆக வர இருக்கிறது. அதனை விறுவிறுப்பாக முடித்துவிட்டு ஆகஸ்ட் மாதமே கமல்ஹாசன் உடன் இணைந்து நெல்சன் இயக்கத்தில் நடிக்கும் KHxRK படத்தில் இணையவுள்ளார் ரஜினி. ஆகஸ்டில் ஒரு படம் ஜனவரியில் ஒரு படம் என நான்கு மாத இடைவெளியில் இரு ரஜினி படங்கள் வர இருப்பது ரசிகர்களுக்கு கொண்டாட்டமான செய்தியாக அமைந்துள்ளது. 

Rajinikanth
`முண்டாசுப்பட்டி', `ராட்சசன்' இயக்குநரின் மூன்றாவது பட ரிலீஸ் அப்டேட்! | Ramkumar | Irandu Vaanam

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com