இது விஷாலின் புது அவதாரம்.. வெளியான அறிவிப்பு! | Yours Frankly Vishal
நடிகர் விஷால் தற்போது `மகுடம்' படத்தில் நடித்து வருகிறார். `ஈட்டி', `ஐங்கரன்' படங்களை இயக்கிய ரவி அரசு இப்படத்தை இயக்கி வருகிறார். நடிப்பு, தயாரிப்பு என இயங்கி வரும் விஷால் தற்போது புதிய அவதாரத்தை கையில் எடுத்திருக்கிறார். அதுதான் Yours Frankly Vishal! என்ற பாட்காஸ்ட்.
இப்போது பல பிரபலங்களும் யூடியூப் சேனல் நடத்துவது, பாட்காஸ்ட் பேசுவது போன்றவை மிக சகஜமான ஒன்றாகிவிட்டது. இப்போது விஷாலும் அந்த ட்ரெண்டுக்குள் வந்திருக்கிறார். இது்பற்றி வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ள விஷால், "உண்மை.. உண்மை.. உண்மை.. உண்மையை தவிர்த்து வேறு எதுவும் பேச மாட்டேன். உண்மையை மட்டும்தான் பேசுவேன். ஏன் இதெல்லாம் சொல்ல வேண்டும், பேட்டி என்றால் உண்மையைத்தானே சொல்ல வேண்டும். சரிதான். இது ஒரு புது முயற்சி, பாட்காஸ்ட். இது முழுக்க Unscripted, Unfilterd விஷால். யுவர்ஸ் ஃபிராங்க்லி விஷால் என்ற பெயரில் இந்த பாட்காஸ்ட் மிக விரைவில் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளதட்" எனக் கூறியிருக்கிறார் விஷால்.
தற்போது தனது 35வது படமான `மகுடம்' படத்தில் நடித்து வருகிறார் விஷால். இப்படத்தில் இயக்குநர் ரவி அரசு - விஷால் இடையே கருத்து வேறுபாடு, எனவே படத்தை விஷால் இயக்குகிறார் என தகவல்கள் வந்த நிலையில், இயக்குநர் ரவி அரசு அதனை மறுத்திருக்கிறார்.