\
Vikram's 63rd film announced
VikramChiyaan 63

வெளியானது விக்ரமின் அடுத்த பட அறிவிப்பு! | Chiyaan 63 | Vikram

மடோன் அஷ்வின், பிரேம் குமார், போடி அறிமுக இயக்குநர் ராஜ்குமார் என பலருடைய பெயர்கள் விக்ரமின் அடுத்த படத்தை இயக்குகிறார் என அதிகாரப்பூர்வமாகவே அறிவிக்கப்பட்டது. ஆனால் அவர்களை வைத்து படம் அடுத்தகட்டத்துக்கு நகரவே இல்லை.
Published on

விக்ரம் நடிப்பில் கடைசியாக வெளியான படம் அருண்குமார் இயக்கிய `வீர தீர சூரன் பாகம் 2'. இப்படம் வெளியாகி ஓராண்டு கடந்த பின்னும் தன்னுடைய அடுத்த படத்தை துவங்காமலே இருந்தார் விக்ரம். இன்று விக்ரம் பிறந்தநாளை முன்னிட்டு அவரது அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

`மண்டேலா', `மாவீரன்' படங்களை இயக்கிய மடோன் அஷ்வின், `96', `மெய்யழகன்' பட இயக்குநர் பிரேம் குமார், போடி ராஜ்குமார் என்ற அறிமுக இயக்குநர் என பலருடைய பெயர்கள் விக்ரமின் அடுத்த படத்தை இயக்குகிறார் என அதிகாரப்பூர்வமாகவே அறிவிக்கப்பட்டது. ஆனால் அவர்களை வைத்து படம் அடுத்த கட்டத்துக்கு நகரவே இல்லை. தொடர்ந்து விக்ரம் பிப்ரவரி மாதம் தனது அடுத்த நான்கு படங்களுக்கான இயக்குநர்களை தேர்வு செய்துவிட்டதாகவும் அறிவித்தார்.

இப்போது விக்ரம் சத்ய ஜோதி தயாரிப்பில் ஆனந்த் ஷங்கர் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இவர்கள் இணைந்து `இருமுகன்' படத்தில் பணிபுரிந்தனர். ஆனந்த் சங்கர் சொன்ன கதையைக் கேட்ட விக்ரம், உடனே ஓகே சொல்லி விட்டாராம். இப்படத்தின் புரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் மே மாதம் முதல் வாரத்தில் துவங்குவதாக சொல்லப்படுகிறது.

Vikram's 63rd film announced
ஹைதராபாத் சார்மினார் இல்லை என்றால், விஜய்க்கு `கில்லி' இல்லை! | 22 Years of Ghilli | Vijay
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com