\
Vikram supposed to act in Nandhalala says Mysskin
MysskinTrain

" 'நந்தலாலா'வில் விக்ரம் நடிக்க வேண்டியது.." - மிஷ்கின் | Mysskin | Vikram

விஜய் சேதுபதிக்கு ஒரு படம் பண்ணலாம் என சார் சொன்னார். 'சைக்கோ' பார்த்துவிட்டு அவர் ரொம்ப நேரம் என்னுடன் பேசினார்.
Published on

மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன் நடித்துள்ள படம் `ட்ரெய்ன்'. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை நடைபெற்றது. இதில் பேசிய மிஷ்கின், "நான் முதல்முறையாக தாணு சாரை 'நந்தலாலா' கதை சொல்வதற்காகச் சந்தித்தேன். கதை கேட்டுவிட்டு அவருக்கு எதுவுமே புரியவில்லை. ’பட்ஜெட் 4 கோடி ரூபாய்’ என்றதும், ’60 கோடி ரூபாயில் பண்ணலாம்’ என்றார். நான், ’இது அப்படிப்பட்ட கதை இல்லை சார்’ என்றேன். அந்தக் கதை விக்ரமுக்கு மிகவும் பிடித்திருந்தது. ’இந்தப் படம் ரொம்ப சின்ன படமாக இருக்கிறது’ என தாணு சார் பண்ணவில்லை. நானும், விக்ரம் போன்ற சிறந்த நடிகருடன் பணிபுரியும் வாய்ப்பை இழந்தேன்.

’விஜய் சேதுபதிக்கு ஒரு படம் பண்ணலாம்’ என சார் சொன்னார். ’சைக்கோ’ பார்த்துவிட்டு அவர் ரொம்ப நேரம் என்னுடன் பேசினார். அவர் நல்ல நடிகர் மட்டுமல்ல, நல்ல மனிதரும்கூட. விஜய் சேதுபதி போட்டோவை ஒட்டி வைத்துவிட்டு அதைப் பார்த்துப் பார்த்து எழுதினேன். வீழ்ந்துபோன ஒருவனைப் பற்றிய கதை இது. வாழ்க்கையில் அர்த்தமே இல்லை, எல்லாம் முடிந்துவிட்டது என நினைக்கும் ஒருவன்தான் நாயகன். என்னதான் நான் எழுதிவிட்டாலும், அதை நடிப்பால் முன்னிறுத்துவது அவர்தான். இந்தப் படத்தை விஜய் சேதுபதியை தவிர வேறு யாரும் செய்திருக்க முடியாது. கமல், அமீர் கான் என யாராலும் பண்ண முடியாது. விஜய் சேதுபதி ஓர் எரிமலை போன்றவர். ஒரு நடிகர் என்றால் என்ன, இதயத்திலிருந்து உடனடியாக ஒன்று வரவேண்டும், அதுதான் முதல் டேக். இந்தப் படத்தில் எந்தக் காட்ச்சியும் இரண்டாவது டேக் போகவில்லை" என்றார்.

Vikram supposed to act in Nandhalala says Mysskin
தனுஷ் பிறந்தநாளில் D56 அப்டேட் வருமா? இயக்குநர் கொடுத்த பதில் | Dhanush | Tamizharasan Pachamuthu
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com