\
Tamizharasan Pachamuthu about D56 update
Tamizharasan PachamuthuD56

தனுஷ் பிறந்தநாளில் D56 அப்டேட் வருமா? இயக்குநர் கொடுத்த பதில் | Dhanush | Tamizharasan Pachamuthu

இப்படத்தின் இயக்குநரான தமிழரசன் பச்சமுத்துவிடம் இப்படத்தின் அப்டேட் ஏதாவது தருமாறு ரசிகர்கள் கேட்டு வந்தனர். அதற்கு பதிலாக D56க்கான கலை இயக்குநரின் பெயர் வீரமணி கணேசன் என்று தமிழரசன் கூறினார்.
Published on

தனுஷ் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனது 55வது படமான 'ஓம்' படத்தில் நடித்து வருகிறார். இதற்கு பின் 'லப்பர் பந்து' இயக்குநர் தமிழரசன் பச்சமுத்துவுடன் அவர் நடிக்கும் 56வது படம் உருவாக உள்ளது. இப்படம் பற்றிய எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. மேலும் இப்படம் குறித்து தெரிந்து கொள்ளவும் ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இப்படத்தின் இயக்குநரான தமிழரசன் பச்சமுத்துவிடம் இப்படத்தின் அப்டேட் ஏதாவது தருமாறு ரசிகர்கள் கேட்டு வந்தனர். அதற்கு பதிலாக D56- க்கான கலை இயக்குநரின் பெயர் வீரமணி கணேசன் என்று தமிழரசன் கூறினார். இம்மாதம் 28ம் தேதி தனுஷின் பிறந்தநாள் வரும் சூழலில், அன்று D56 படத்தின் அப்டேட் எதுவும் வருமா என ஒரு ரசிகர் கேட்டிருக்கிறார்.

அதற்கு பதில் சொன்ன தமிழரசன், "வராது தம்பி. D55 release ku அப்புறம் தான் எதுவா இருந்தாலும். .வேணும்னா அன்னைக்கு costume designer யாருன்னு update சொல்றேன். .என் சக்திக்கு அவ்ளோதான் முடியும்." என்று கூறினார். தற்போது தனுஷ் நடிப்பில் ஓம் மற்றும் D56 தவிர, பிறகு  மாரி செல்வராஜுடன் மீண்டும் ஒரு படத்திற்காக இணைகிறார். தமிழ் முருகன் படத்துக்காக வெற்றிமாறனுடன் தனுஷ் மீண்டும் கைகோர்க்கவுள்ளார் என்ற அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

Tamizharasan Pachamuthu about D56 update
மிஷ்கின் ஒரு சைக்கோனு பயந்தேன்! - விஜய் சேதுபதி | Vijay Sethupathi | Mysskin | Train
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com