விஜயின் அடுத்த ரீ - ரிலீஸ் ப்ரண்ட்ஸ்! | Friends Re Release | Vijay | Suriya
தமிழ் சினிமாவிலும் ரீ ரிலீஸ் சீசன் தொடர உள்ளது. விஜய் நடித்த `கில்லி', `சச்சின்', `குஷி' படங்களை தொடர்ந்து `ப்ரண்ட்ஸ்' படமும் நவம்பர் 21 ஆம் தேதி ரீ ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.1999 ஆம் ஆண்டு இயக்குநர் சித்திக் இயக்கி வெளியான மலையாள படம், `ப்ரண்ட்ஸ்'. அதே பெயரில் சித்திக் இப்படத்தை தமிழில் ரீமேக் செய்தார். இப்படம் 2001 பொங்கல் ரிலீஸ் ஆக வெளியாகி மிகப்பெரிய ஹிட்டானது.
இப்படத்தில் விஜயுடன் சூர்யா, ரமேஷ் கண்ணா, விஜயலட்சுமி, வடிவேலு, அபிநயஸ்ரீ, சார்லி மற்றும் ராதா ரவி உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்த படம் அதன் பாடல்களுக்காகவும், எமோஷனல் காட்சிகளுக்காகவும் குறிப்பாக வடிவேலுவின் நகைச்சுவை காட்சிகளுக்காகவும் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது இப்படம். தற்போது டால்பி அட்மாஸ் ஒலியுடன் 4K வடிவத்தில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
நவம்பர் முழுக்கவே ரீ ரிலீஸ் மாதம் தான் போல. ஏற்கெனவே நவம்பர் 6ம் தேதி கமல்ஹாசனின் `நாயகன்', 28ம் தேதி சூர்யாவின் ரீ எடிட் செய்யப்பட `அஞ்சான்' போன்ற படங்கள் ரீ ரிலீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரஜினிகாந்தின் பிறந்தநாளான டிசம்பர் 12 `அண்ணாமலை' ரீ ரிலீஸ் ஆகவுள்ளது.