20 ஆண்டுகளுக்கு பிறகும் ‘ஆல் ஏரியாலயும் ஐயா கில்லிடா..’ - ரீரிலீஸ் செய்த முதல் நாளிலேயே இவ்ளோ வசூலா?

நடிகர் விஜய் நடித்த கில்லி திரைப்படம் 20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளன.
கில்லி
கில்லிமுகநூல்

தெலுங்கில் வெளியான ஒக்கடு திரைப்படம், தமிழில் ‘கில்லி’யாக விஜய் - த்ரிஷா நடிப்பில் 2004-ல் ரீமேக்கானது. தமிழில் இப்படத்திற்கு தமிழில் நல்ல வரவேற்பு கிடைத்தது. தரணியின் இயக்கத்தில் நடிகை த்ரிஷா மற்றும் நடிகர் விஜய்யின் நடிப்பில் உருவான கில்லி படம், தமிழகம் முழுவதும் தற்போது 20 ஆண்டுகள் கழித்து மறு வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

 கில்லி
கில்லி

நடிகர் விஜயின் நடிப்பில் எண்ணற்ற படங்கள் வெளியாகி வசூலை வாரி குவித்தாலும், கில்லி படத்திற்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு.

கில்லி
“ரோமியோவ அன்பே சிவம் ஆக்கிடாதீங்க” - விஜய் ஆண்டனி காட்டமான பதிவு

பலமுறை பார்த்தாலும் சலிப்பில்லாமல் கொண்டுசெல்லும் அளவிற்கு இக்கதையின் திரையம்சம் அமைந்திருக்கும். கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான இப்படம், அப்போதே 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை வாரிக்குவித்தது.

கில்லி ரீ-ரிலீஸ்
கில்லி ரீ-ரிலீஸ்

இந்நிலையில் 20 ஆண்டுகள் கழித்து தற்போது ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட இப்படம் இன்று முதல் நாளிலியே 3 முதல் 4 கோடி வரை வசூலை வாரிக்குவிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கில்லி ரீ-ரிலீஸ்
கில்லி ரீ-ரிலீஸ்

இதனை கொண்டாடும் வகையில் சென்னை கிழக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அம்பத்தூரில் உள்ள முருகன் திரையரங்கில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு காட்சியை காண விஜய் ரசிகர்கள் 1000த்திற்கும் மேற்பட்டோர் குவிந்து பட்டாசு வெடித்தும், விஜய்யின் பேனருக்கு பால் ஊற்றியும் ஆரவாரம் செய்து வருகின்றனர்.

20 வருடங்களுக்குப் பிறகும் ஆல் ஏரியாலயும் சொல்லி அடிக்கிறது கில்லி!

கில்லி படத்தை தமிழகத்தில் ரீ-ரிலீஸ் செய்துள்ள சக்திவேலன் X தளத்தில், “ 'கில்லி' முதல்நாள் வசூல் மட்டும்

சில கோடிகள் அல்ல…

பலகோடிகளை தொட வாய்ப்புள்ளது."

என்றுள்ளார். அதனால் ஆல் ஏரியாவிலும் இப்போ அண்ணன்தான் கில்லி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com