“ரோமியோவ அன்பே சிவம் ஆக்கிடாதீங்க” - விஜய் ஆண்டனி காட்டமான பதிவு
இயக்குநர் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, மிர்னாளினி ரவி, யோகிபாபு, விடிவி கணேஷ் போன்ற நட்சத்திரங்கள் நடித்திருக்கும் திரைப்படம் ரோமியோ. இத்திரைப்படம் கடந்த 11 ஆம் தேதி வெளியாகி இருந்தது.
இதுவரை பெரும்பாலும் க்ரைம் த்ரில்லர் வகையான திரைப்படங்களில் நடித்திருந்த விஜய் ஆண்டனி காதல் ஃபார்முலாவில் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளார். எதிர்பார்ப்புக்கு மத்தியில் படம் வெளியாகி இருந்தாலும் கலவையான விமர்சனங்களையே பெற்றது. சில விமர்சகர்கள் திரைப்படத்தை மிகவும் காட்டமாக விமர்சனம் செய்திருந்தனர்.
இந்நிலையில் தனது சமூக வலைதளத்தில் ரோமியோ திரைப்படம் குறித்து பகிர்ந்துள்ள விஜய் ஆண்டனி, “பல நல்ல படங்களை தவறாக விமர்சித்துக் கொல்லும் திரு. புளுசட்டை மாறன் போன்ற சிலருக்கும், இவங்க சொல்றதையெல்லாம் உண்மை என்று நம்பி, ரோமியோ போன்ற பல நல்ல படங்களைக் கொண்டாடாமல், தமிழ் சினிமாவை குறை சொல்லும் அறிவு ஜீவிகளுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
என் அன்பு மக்களே ரோமியோ ஒரு நல்ல படம்.. போய் பாருங்க புரியும்.. ரோமியோவ அன்பே சிவம் ஆக்கிடாதீங்க” என பதிவிட்டுள்ளார். விஜய் ஆண்டனியின் இப்பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.