Naa ready songSony music south you tube
கோலிவுட் செய்திகள்
‘கெடா வெட்டி கொண்டாங்கடா... என் பசி நான் தணிக்க’ - விஜய்யின் குரலில் வெளியான ‘நா ரெடி’ பாடல்!
நடிகர் விஜய்யின் ‘லியோ’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘நா ரெடி’ பாடல் இன்று வெளியாகியுள்ளது.
விஜய்யின் 67-வது படமாக தயாராகி வருகிறது ‘லியோ’. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில் தயாராகி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடையவுள்ளது. இதனைத் தொடர்ந்து அடுத்த மாதத்தில் இருந்து போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு நள்ளிரவு ‘லியோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. தொடர்ந்து, தற்போது ‘நா ரெடி’ பாடல் வெளியாகியுள்ளது. விஜய்யின் குரலில் வெளியாகியுள்ள இந்தப் பாடல், யூட்யூப் தளத்தில் வெளியான ஒரு மணி நேரத்தில் 2.3 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது.