\
Appa Kutty
Vijay AntonyAppa Kutty

தந்தை - மகள் பாசம் பேசும் விஜய் ஆண்டனியின் `அப்பா குட்டி' | Appa Kutty

வழக்கமாக த்ரில்லர் படங்களை இயக்கும் மு மாறன் இப்படத்தை தந்தை – மகள் உறவை மையமாகக் கொண்டு உருவாகும் ஆக்ஷன் குடும்ப திரைப்படமாக எடுத்துள்ளார்.
Published on

விஜய் ஆண்டனி நடிப்பில் மு மாறன் இயக்கத்தில் நடித்துள்ள படம் `அப்பா குட்டி'. இதில்  ப்ரீத்தி அஸ்ரணி, லிதான்யா, பகவதி பெருமாள், ஹரிபிரியா, இசையருவி மதன், சித்ரா லக்ஷ்மணன், ஸ்ரீஜா ரவி, வேட்டை முத்துக்குமார், ஜென்சன் தீவாகர், முருகானந்தம், மூணார் ரமேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வழக்கமாக த்ரில்லர் படங்களை இயக்கும் மு மாறன் இப்படத்தை தந்தை – மகள் உறவை மையமாகக் கொண்டு உருவாகும் ஆக்ஷன் குடும்ப திரைப்படமாக எடுத்துள்ளார். படப்பிடிப்பு தற்போது வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இதையடுத்து, பின்னணி பணிகள் (Post Production) முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றன.

Appa Kutty
ஜார்ஜ் குட்டி இம்முறை சிக்கினாரா? | த்ரிஷ்யம் 3 விமர்சனம் | Drishyam 3 Review | Mohanlal

விஜய் ஆண்டனி, இந்தப் படத்தில் உணர்ச்சி ஆழமும் அதிரடி நிறைந்த நடிப்பையும் வெளிப்படுத்தியுள்ளார் எனவும் தந்தை மற்றும் மகளுக்கிடையிலான பாசமிக்க உறவை மையமாகக் கொண்ட இந்தக் கதை, அதனுடன் இணைந்த ஆக்ஷன் அம்சங்கள் மூலம் உணர்வுகளை மேலும் வலுப்படுத்தும் எனவும் கூறுகிறார்கள். இந்தப் படத்தை வரும் ஆகஸ்ட் மாதத்தில் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com