Sundar C
Sundar CIruttu

மூன்றாவது முறையாக சுந்தர் சி உடன் இணையும் இயக்குநர்! | Sundar C

இப்படம் ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும் வகையிலான திகில் நிறைந்த பேய் கதையாக இருக்கும் என்று ஜி.ஏ. ஹரிகிருஷ்ணன் தெரிவித்தார்.
Published on

அஜித் நடித்த `முகவரி' படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் துரை V.Z. தொடர்ந்து விக்ரம் நடித்த `காதல் சடுகுடு', சிம்பு நடித்த `தொட்டி ஜெயா', பரத் நடித்த `நேபாளி' ஆகிய படங்களை இயக்கினார். சமீபத்தில்  'இருட்டு', 'தலைநகரம் 2' ஆகிய இரு படங்களை சுந்தர் சி நடிப்பில் இயக்கினார்.

இப்போது மூன்றாவது முறையாக சுந்தர் சி - துரை V.Z கூட்டணி இணைய உள்ளது. யோகி பாபு, முன்னணி பாலிவுட் நடிகர் மற்றும் பிரபல தமிழ் நட்சத்திரங்கள் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இதனை 'மோ', 'மாயோன்', 'மெட்ராஸ் மேட்னி', செல்வராகவன் நடிக்கும் திரைப்படம் ஆகியவற்றை தயாரிக்கும் மொமண்ட் என்டர்டெயின்மெண்ட்ஸ் பேனரில் ஐந்தாவது படைப்பாக ஜி.ஏ. ஹரிகிருஷ்ணன், துர்கா தேவி ஹரிகிருஷ்ணன் தயாரிக்க உள்ளனர்.

V Z Dhorai
V Z Dhorai
Sundar C
"உள் நோக்கமும், எந்த லாப நோக்கும் இல்லை" சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கேட்ட பார்த்திபன் | Parthiban

இப்படம் ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும் வகையிலான திகில் நிறைந்த பேய் கதையாக இருக்கும் என்று ஜி.ஏ. ஹரிகிருஷ்ணன் தெரிவித்தார். திரைப்படம் குறித்து மேலும் பேசிய அவர், "சுந்தர் சி, துரை V.Z. கூட்டணியில் மீண்டும் உருவாகும் திரைப்படத்தை தயாரிப்பதில் மகிழ்ச்சி. படப்பிடிப்பை வரும் மே மாதம் தொடங்க திட்டமிட்டுள்ளோம். ரசிகர்களுக்கு இது ஒரு முற்றிலும் புதிய அனுபவமாக இருக்கும்," என்றார்.

Sundar C
சாய் அப்யங்கரின் 5வது INDI பாடல் வெளியானது! | Pavazha Malli | Sai Abhyankkar

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com