Trisha
TrishaCinema

`சினிமாவிலிருந்து விலகலா?' கிண்டலாக பதில் அளித்த த்ரிஷா | Trisha

அடுத்து சூர்யா நடிப்பில் ஆர் ஜே பாலாஜி இயக்கியுள்ள `கருப்பு' படத்தில் நடித்துள்ளார், இப்படம் மே 14ம் தேதி வெளியாகவுள்ளது.
Published on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் த்ரிஷா. கிட்டத்தட்ட 25 ஆண்டு காலமாக சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். அவர் நடிப்பில் கடந்த ஆண்டு, `விடாமுயற்சி', `குட் பேட் அக்லி', `தக் லைஃப்' ஆகிய படங்கள் வெளியானது. அடுத்து சூர்யா நடிப்பில் ஆர் ஜே பாலாஜி இயக்கியுள்ள `கருப்பு' படத்தில் நடித்துள்ளார், இப்படம் மே 14ம் தேதி வெளியாகவுள்ளது.

Trisha
Trisha

இந்நிலையில் த்ரிஷா சினிமாவிலிருந்து விலக போவதாக தகவல்கள் பரவிவந்தன. சிரஞ்சீவி நடிப்பில் `Vishwambhara' மற்றும் மோகன்லால் நடிப்பில் `ராம்' ஆகிய படங்களில் நடிப்பதாக கமிட் ஆனார். இந்தப் படங்களுக்கு பிறகு த்ரிஷா எந்த படத்திலும் ஒப்பந்தமானதாக தகவல்கள் எதுவும் வெளியாகாததும் இதற்கு ஒரு காரணம். இது குறித்து பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன் நடத்தி வரும் டூரிங் டாக்கீஸ் யூட்யூப் சேனலின் ஒரு நிகழ்ச்சியில் த்ரிஷா இனி நடிக்க மாட்டார் என செய்திகள் பரவுகிறதே அது உண்மையா என நேயர் ஒருவர் கேள்வி கேட்க, அதற்கு பதில் சொன்ன சித்ரா லட்சுமணன் "நடிகை த்ரிஷா பற்றி வெளியாகியிருக்கும் அந்த செய்தி உண்மைதான். சமீபத்தில் ஒரு சில தயாரிப்பாளர்கள் கூட எனக்கு அதை உறுதிபடுத்தினார்கள்." என பதிலளித்தார்.

Trisha
`ஜெயிலர் 2' படப்பிடிப்பு எந்த நிலையில் உள்ளது? ரிலீஸ் எப்போது? | Jailer 2 | Rajinikanth

இப்போது இதற்கு பதில் அளிக்கும் விதமாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி வைத்துள்ளார். அதில் "நான் திரைப்படங்களில் நடிப்பதை விட்டுவிட்டேன், ஒரு பணக்கார தொழிலதிபரை திருமணம் செய்துக்கொண்டேன், நான்கு குழந்தைகளை வளர்த்து வருகிறேன் அவர்களுக்கு நேற்றோடு இரண்டு வயது. இதில் இன்னும் ஏதாவது சேர்க்க வேண்டுமா, இல்லை இன்றைய கற்பனை கோட்டாவை நாம் முடித்துவிட்டோமா?" என்று பதிவிட்டுள்ளார்.

Trisha
நெல்லை | 51 நிபந்தனைகளுடன் அனுமதி; ரோட் ஷோ நடத்த திட்டம்? - செங்கோட்டையன் அளித்த பதில்.!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com