Trisha
TrishaKaruppu

`கருப்பு' பட நிகழ்ச்சிக்கு த்ரிஷா அழைக்கப்படவில்லையா..? த்ரிஷா பதிலால் ரசிகர்கள் அதிர்ச்சி!

`அடக்கடவுளே இதில் த்ரிஷா இருக்கிறார் என்பதையே மறந்துவிட்டேன்' என பதிவிட்டிருந்தார். அதற்கு கமெண்ட் செய்த த்ரிஷா, `நானும் கூட மறந்துவிட்டேன். இப்போதாவது அவர்கள் (படக்குழு) நினைவூட்டியது நல்லது' எனப் பதிவிட்டார்.
Published on
Summary

சூர்யா நடிப்பில் ஆர்.ஜே. பாலாஜி இயக்கிய ‘கருப்பு’ படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் நடந்தது. ஹீரோயின் த்ரிஷா வராததை ரசிகர்கள் கேள்வி எழுப்ப, எக்ஸ் தளத்தில் ‘எனக்கான அழைப்பிதழ் மெயிலில் தொலைந்துவிட்டது போல’ என்று கிண்டலாக பதிலளித்தார். தன் கதாபாத்திர டீசர் வெளியானதையும், தன்னை படக்குழு இப்போது தான் நினைவூட்டியதாகவும் நகைச்சுவையாக குறிப்பிட்டார்.

சூர்யா நடிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ள படம் `கருப்பு'. இப்படத்தில் த்ரிஷா, ஸ்வாசிகா, ஷிவதா, இந்திரன்ஸ், யோகிபாபு எனப் பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் மே 14ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா ஏப்ரல் 26ம் தேதி மதுரையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சூர்யா உட்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு பேசினார்கள்.

A King Is Coming For His Throne says R J Balaji
R J BalajiKaruppu

நேற்று த்ரிஷாவின் கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தும் விதமாக த்ரிஷா நடித்துள்ள ப்ரீத்தி பாத்திரத்தின் டீசர் வெளியிடப்பட்டது. இந்த டீசரை ரசிகை ஒருவர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்து `அடக்கடவுளே இதில் த்ரிஷா இருக்கிறார் என்பதையே மறந்துவிட்டேன்' என பதிவிட்டிருந்தார். அதற்கு கமெண்ட் செய்த த்ரிஷா, `நானும் கூட மறந்துவிட்டேன். இப்போதாவது அவர்கள் (படக்குழு) நினைவூட்டியது நல்லது' எனப் பதிவிட்டார்.

Trisha
`துருவ நட்சத்திரம்' வெளியிட அனுமதி.. சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு! | Gautham Menon | Vikram

அதே பதிவில் த்ரிஷா ஆடியோ வெளியீட்டுக்கு வராதது குறித்து கிண்டலாக கமெண்ட் செய்தார். அதற்கு பதில் அளித்த த்ரிஷா `எனக்கான அழைப்பிதழ் தபாலில் தொலைந்துவிட்டது போல' என பதிவிட்டார்.

கருப்பு படத்தின் ஹீரோயின் த்ரிஷா. அவரையே இந்த நிகழ்வுக்கு அழைக்கவில்லையா? என்பது மாதிரியான பேச்சுகள் இப்போது எழுந்துள்ளது. மேலும் இசை வெளியீட்டு நிகழ்வில் பேசிய இயக்குநர் ஆர் ஜே பாலாஜி "திரிஷா இன்று எங்களுடன் இணைய முடியவில்லை. ஆனாலும் அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள். திரிஷாவாக இருப்பது எளிதல்ல. 23 ஆண்டுகளாக உச்சத்தில் இருப்பது எளிதல்ல. சமீப காலங்களில் இது அவருடைய சிறந்த கதாபாத்திரங்களில் ஒன்றாக இருக்கும்." எனப் பேசியது குறிப்பிடத்தக்கது.

Trisha
அஜித் பிறந்தநாள்| அரசியல் ‘தல’யாக விரும்பாத AK.. பகுத்தறிவு பத்மபூஷன் வில்லனான கதை!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com