வருகிறது மூக்குத்தி அம்மன் பார்ட் 2? ஆனா ஹீரோயின் நயன் இல்லையா?

மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தில் நயன்தாராவுக்கு பதிலாக நடிகை த்ரிஷா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நயன்தாரா
நயன்தாராபுதியதலைமுறை

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. கொரோனா நேரத்தில் படம் வெளியானதால், ஹாட்ஸ்டாரில் மட்டுமே வெளியானது. தியேட்டர் ரிலீஸ் இல்லையென்றபோதும், நல்ல விமர்சனங்களையே படம் பெற்றது. இந்நிலையில் மூக்குத்தி அம்மன் 2 எடுக்கப்போவதாகவும் அதில் நயன்தாராவுக்கு பதிலாக வேறு நடிகை நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மூக்குத்தி அம்மன்
மூக்குத்தி அம்மன்

கடந்த சில வருடங்களாகவே ஆர்.ஜே.பாலாஜி தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முக்கிய நடிகராக இருக்கிறார். நானும் ரவுடிதான் படத்தில் விஜய் சேதுபதிக்கு நண்பராக தொடங்கி, பின் எல்.கே.ஜி, வீட்ல விசேஷம், சிங்கப்பூர் சலூன் போன்ற படங்களில் நடித்து மக்கள் மனதில் பதிந்தார். நடிகராக மட்டுமன்றி இயக்குனராகவும் அவர் மாறிய படம்தான், மூக்குத்தி அம்மன். இப்படத்தை என்.ஜே.சரவணனுடன் சேர்ந்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கியிருந்தார்.

நயன்தாரா
கருடன் | Gangs of Godavari | Mr & Mrs Mahi | Panchayat S3 | இந்த வார OTT, தியேட்டர் வாட்ச்லிஸ்ட் இதோ

2020 யில் வெளியான இத்திரைப்படம் பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்பைப்பெற்றது. இதில் ஆர்.ஜே. பாலாஜி திரைக்கதையை எழுதியதோடு முன்ணனி கதாபாத்திரத்தில் நடித்தும் இருந்தார். மூக்குத்தி அம்மனாக நயன்தாரா நடித்திருந்தார். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ஊர்வசி நடித்திருந்தார். நகைச்சுவை, சென்டிமென்ட் என குடும்ப திரைப்படமாகவே இருந்தது மூக்குத்தி அம்மன். இந்நிலையில் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தில் நயன்தாராவுக்கு பதிலாக நடிகை த்ரிஷா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

த்ரிஷா
த்ரிஷா

இது தொடர்பாக கடந்த சில தினங்களாக பல தகவல்கள் இணையத்தில் பரவிவருகின்றன. அதன்படி மூக்குத்தி அம்மன் படத்திற்கு தொடர்ச்சியாக இது இருக்காது எனவும், இப்படம் வேறு கதைக்களத்தில் இருக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. அதனால் பெயரில் கூட மாற்றம் இருக்கலாமாம். இருப்பினும், இது குறித்து தயாரிப்பாளர்கள் இன்னும் எவ்வித அதிகாரப்பூர்வமான தகவல்களையும் வெளியிடவில்லை. விரைவில் அறிவிப்பு வெளியாகும்பட்சத்தில், ‘நயன்தாரா இல்லனா த்ரிஷா’தான்!

- ஜீவ நந்தினி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com