OTT This week release
OTT This week releasePuthiya thalaimurai

கருடன் | Gangs of Godavari | Mr & Mrs Mahi | Panchayat S3 | இந்த வார OTT, தியேட்டர் வாட்ச்லிஸ்ட் இதோ

அதிக எதிர்பார்ப்பில் இருக்கும் தமிழில் சூரி நடித்திருக்கும் கருடன், விஷ்வாக் சென் நடித்திருக்கும் Gangs of Godavari உட்பட பல மொழிப்படங்கள் இந்த வார வாட்ச் லிஸ்ட்டில் இடம்பெற்றிருக்கின்றன.

தமிழில் சூரி நடித்திருக்கும் கருடன், தெலுங்கில் விஷ்வாக் சென் நடித்திருக்கும் Gangs of Godavari, இந்தியில் ஷரண் ஷர்மா இயக்கத்தில் ராஜ்குமார் ராவ் - ஜான்வி கபூர் நடித்துள்ள Mr & Mrs Mahi, மூன்றாவது சீசனாக வெளிவரவுள்ள Panchayat வெப்சீரிஸ், தமிழிலேயே உப்பு புளி காரம் வெப்சீரிஸ் என பல படங்கள், வெப்சீரிஸ்கள் இந்த வார வாட்ச் லிஸ்ட்டில் இடம்பெற்றிருக்கின்றன. அந்த தொகுப்பை பார்க்கலாம்...

1. Panchayat: S3 (Hindi) Prime - May 28

உத்தரப்பிரதேசத்தின் ஒரு சிறிய கிராமத்தில், பஞ்சாயத் செயலாளராக பணிக்கு சேர்கிறார் ஒரு நகரத்து இளைஞன். அவனுக்கும் அந்த கிராமத்துக்குமான உறவை இரு சீசன்களாக சொன்னது `Panchayat'. வர இருக்கும் மூன்றாவது சீசனில் பஞ்சாயது தேர்தலை மையமாக வைத்து உருவாகியிருக்கிறது.

2. Illegal: S3 (Hindi) Jio Cinema - May 29

சஹிர் ரஸா இயக்கத்தில் நேஹா ஷர்மா நடித்த சீரிஸ் `Illegal'. ஒரு law firm உள்ளே நடக்கும் நிகழ்வுகளே கதை.

3. Uppu Puli Kaaram (Tamil) Hotstar - May 30

ரமேஷ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் சீரிஸ் `உப்பு புளி காரம்’. ஹோட்டல் ஓனரான தந்தை, அவர் தன் மனைவி, மூன்று மகள்கள், ஒரு மகனுடன் அமைதியாக வாழ்கிறார். ஆனால் அந்தக் குடும்பத்துக்குள் நுழையும் ஒரு நபரால் எல்லாம் மாறுகிறது. வார வாரம் ஒரு எப்பிசோடாக வர இருக்கிறது.

4. Geek Girl (English) Netflix - May 30

Holly Smale எழுதிய `Geek Girl' அதே பெயரில் சீரிஸாக உருவாகியிருக்கிறது. ஒரு பதின்பருவ மாணவி. மாடலிங் துறையில் நுழைந்த பின் அவள் சந்திக்கும் பிரச்சனைகளே கதை.

5. Eric (English) Netflix - May 30

Lucy Forbes இயக்கத்தில் Benedict Cumberbatch நடித்திருக்கும் சீரிஸ் `Eric’. மகன் காணாமல் போன பின் வின்செண்ட் வாழ்வில் சந்திக்கும் துயரங்களே கதை.

6. House of Lies (Hindi) Zee5 - May 31

சஞ்சய் கபூர் இயக்கியிருக்கும் படம் `House of Lies'. ஆல்பர்ட் பின்டோ அவரது பிறந்தநாள் பார்ட்டியில் பிணமாக கிடக்கிறார். கொலையாளி யார் என ராஜ்வீர் விசாரிக்கிறார், கொலையாளி யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பதே கதை.

7. Dedh Bigha Zameen (Hindi) Jio Cinema - May 31

Pratik Gandhi நடித்துள்ள படம் `Dedh Bigha Zameen'. அனில் தனது சகோதரியின் திருமணத்திற்காக குடும்ப நிலத்தை விற்க முயலும் போதுதான், அது அதிகாரம் மிக்க சிலரால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பது தெரிய வருகிறது. நியாயத்துக்கான போராட்டம் வென்றதா என்பதே படம்.

8. Swatantra Veer Savarkar (Hindi) Zee5 - May 28

ரந்தீப் ஹூடா நடித்து, இயக்கி, தயாரித்த படம் `Swatantra Veer Savarkar'. சுதந்திர போராட்டத்தில் சாவர்கரின் பங்கு என்ன என்பதை கதையாக்கி படமாக உருவாக்கியிருக்கிறார்.

OTT This week release
சாவர்க்கர் பயோபிக் - பாலிவுட்டில் தயாராகும் 'ஸ்வதந்த்ர வீர் சாவர்க்கர்'

9. Sriranga Neethulu (Telugu) Aha - May 29

பிரவீன் குமார் இயக்கத்தில் உருவான படம் `Sriranga Neethulu'. மூன்று இளைஞர்களின் வாழ்க்கை பயணமே படத்தின் கதை

10. Ramanna Youth (Telugu) Etv WIN - May 30

அபய் நவீன் இயக்கத்தில் உருவான படம் `Ramanna Youth'. ராஜு கிராமத்து இளைஞர்களின் தலைவர் ஆக நினைக்கிறான். அதற்கு அவன் செய்யும் ஆர்வக்கோளாறு வேலைகள் தான் கதை.

11. The First Omen (English) Hotstar - May 30

Arkasha Stevenson இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் `The First Omen’. சீக்குவல் எடுத்து எடுத்து சலித்துப் போன ஹாலிவுட் இம்முறை ப்ரீக்குவல் பேய்ப்படம் எடுத்திருக்கிறது. 1976ல் வெளியான The Omen படத்திற்கு ப்ரீக்குவலாக உருவாகியிருக்கிறது படம்.

12. Oru Nodi (Tamil) Aha - May 31

மணிவர்மன் இயக்கத்தில் உருவாகிய படம் `ஒரு நொடி'. காவலதிகாரி பரிதி இளமாறன், காணாமல் போனவர் பற்றிய ஒரு வழக்கை விசாரிக்கிறார். அவர் கிடைத்தாரா இல்லையா என்பதே கதை.

13. The Last Rifleman (English) Jio Cinema - May 31

Terry Loane இயக்கத்தில் Pierce Brosnan நடித்த படம் `The Last Rifleman'. இரண்டாம் உலகப்போரில் கலந்து கொண்ட முன்னாள் ராணுவ வீரர் வயோதிகத்தையும் மீறி, தன் கேர் ஹோமிலிருந்து வெளியேறுகிறார். காரணம் ஃப்ரான்ஸ் சென்று ஒரு ஆபத்தான விஷயத்தை செய்து முடிக்க வேண்டும். அதை முடித்தாரா இல்லையா என்பதே கதை.

14. Garudan (Tamil) - May 31

துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி, சசிக்குமார், உன்னி முகுந்தன் நடித்திருக்கும் படம் `கருடன்’. ஆதி - கருணா என்ற இரு நண்பர்களுக்கு இடையே சொக்கன் வந்த பிறகு என்ன நிகழ்கிறது என்பதே கதை. படத்தின் கதையை வெற்றிமாறன் எழுதியிருப்பது கூடுதல் ஸ்பெஷல்.

OTT This week release
“சூரி.. இந்த வெற்றி, வெற்றியே உனக்கு கொடுத்தது! இதுக்குப்பிறகுதான் நீ கவனமா இருக்கணும்” - விஜய் சேதுபதி

15. Hit List (Tamil) - May 31

இயக்குநர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா நாயகனாக அறிமுகமாகும் படம் `ஹிட்லிஸ்ட்’. பரபரப்பான த்ரில்லர் படமாக உருவாகியிருக்கிறது. இருக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரித்திருக்கிறார்.

16. Bujji At Anupatti (Tamil) - May 31

ராம் கந்தசாமி இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் `புஜ்ஜி at அனுபட்டி’. ஒரு ஆட்டுக்குட்டிக்கும் சிறுமிக்குமான பாசத்தை பேசும் படம்.

17. The Akaali (Tamil) - May 31

முகமது ஆசிஃப் ஹமீத் இயக்கியிருக்கும் படம் `The Akaali’. ப்ளாக் மேஜிக் சம்பந்தப்பட்ட கதைக்களத்தில் தயாராகியிருக்கிறது.

18. Gangs of Godavari (Telugu) - May 31

விஷ்வாக் சென் நடித்திருக்கும் படம் `Gangs of Godavari’. 1980களில் கோதாவரி கடற்கரை பகுதிகளில் நடக்கும் கதை. அரசியலும், ரௌடியிசமும் பற்றி சொல்லும் படம்.

OTT This week release
மேடையில் தள்ளிவிட்டாரா பாலைய்யா? வீடியோ வைரலான நிலையில், ட்வீட் மூலம் நடிகை அஞ்சலி பதில்!

19. Mr. & Mrs. Mahi (Hindi) - May 31

ஷரண் ஷர்மா இயக்கத்தில் ராஜ்குமார் ராவ் - ஜான்வி கபூர் நடித்துள்ள படம் `Mr. & Mrs. Mahi'. மகேந்திரன் ஒரு தோல்வியுற்ற க்ரிக்கெட்டர். அவனுக்கு அமையும் மனைவி மஹிமா டாக்டர். ஆனாலும் அவர்கள் இருவருக்கும் பிடித்தமான விஷயம் க்ரிக்கெட். தான் தோல்வியடைந்த க்ரிக்கெட்டில், தன் மனைவியை சாதிக்க வைக்க அவர் எடுக்கும் முயற்சிகள் என்னாகிறது என்பதே கதை.

20. The Strangers: Chapter 1 (English) - May 31

Deep Blue Sea, Die Hard 2 படங்களை இயக்கிய Renny Harlin தற்போது இயக்கியுள்ள படம் `The Strangers Trilogy'. மூன்று பாகங்களில், முதல் பாகம் இப்போது வெளியாகவுள்ளது. பயணத்தில் இருக்கும் ஒரு இளம் ஜோடி, வழியில் தங்கிவிட்டு செல்ல ஓரிடத்தில் தஞ்சமடைகிறார்கள், அங்கு அவர்களை பயமுற்றுத்தும் மூன்று முகமூடி நபர்கள் வர, அதன் பின் நடப்பவையே கதை.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com