Rajini - Kamals Reunion movie promo out now
Rajinikanth, KamalhaasanRK KH

"சரி.. யாரு ஹீரோ?" வெளியானது ரெட்ரோ ஸ்டைல் ரஜினி கமல் ப்ரோமோ | KH x RK Reunion | Rajini | Kamal

`தில்லு முல்லு', இந்தியில் அமிதாப் பச்சனுடன் ரஜினி - கமல் இணைந்து நடித்த `Geraftaar' போன்ற படத்திற்குப் பிறகு முற்றிலுமாக பிரிந்தது. தற்போது தமிழில் 47 ஆண்டுகள் கழித்து ஒரே படத்தில் வர இருக்கிறது ரஜினி - கமல் எனும் இரு உச்ச சக்திகள்.
Published on

தமிழ் சினிமாவில் தவிர்க்கவே முடியாத இரண்டு உச்ச நட்சத்திரங்கள் ரஜினிகாந்த் - கமல்ஹாசன். கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்குப் பிறகு ரஜினியும் கமலும் இணைந்து நடிக்கும் படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. ஆரம்ப காலங்களில் இருவரும் நிறைய படங்களில் இணைந்து நடித்துள்ளனர். ரஜினியின் முதல் படமான ’அபூர்வ ராகங்கள்’ படத்திலேயே கமல் முக்கியமான பாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் `தப்பு தாளங்கள்', `மூன்று முடிச்சு', `அவர்கள்', பதினாறு வயதினிலே', `இளமை ஊஞ்சல் ஆடுகிறது’ எனப் பல படங்களில் இணைந்து நடித்தனர். தமிழில் 1979இல் வெளியான `நினைத்தாலே இனிக்கும்' படத்திற்குப் பிறகு இந்தக் கூட்டணி இணையாமல் இருந்தது. `தில்லு முல்லு' படத்தில் கமல் சிறப்பு தோற்றத்தில் நடித்தது, இந்தியில் அமிதாப் பச்சனுடன் ரஜினி - கமல் இணைந்து நடித்த `Geraftaar' போன்ற படத்திற்குப் பிறகு முற்றிலுமாக இக்கூட்டணி பிரிந்தது. தற்போது தமிழில் 47 ஆண்டுகள் கழித்து ஒரே படத்தில் வர இருக்கிறது ரஜினி - கமல் எனும் இரு உச்ச சக்திகள்.

ரஜினி - கமல் இணைந்து மீண்டும் ஒரு படம் நடிப்பதாக கடந்த ஆண்டிலிருந்து செய்திகள் பரவின. பின்னர் அதனை இருவரும் உறுதியும் செய்தனர். முதலில் இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவார் எனச் சொல்லப்பட்டது. ஆனால் `அவர்கள் எதிர்பார்த்தது போன்ற ஒரு கதை என்னிடத்தில் இல்லை. எனவே அந்தப் படத்திலிருந்து நான் விலகிக் கொண்டேன்' என சமீபத்திய செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார் லோகேஷ். பிரதீப் ரங்கநாதனிடமும் இப்படத்தை இயக்குவதற்கான பேச்சுவார்த்தை நடந்தது என்றும் தகவல்.

Rajini - Kamals Reunion movie promo out now
"உங்களது நடிப்பு மிகவும் தனித்துவமாக இருந்தது" - நிவினை வாழ்த்திய சூர்யா - ஜோதிகா | Sarvam Maya

’ஜெயிலர் 2’ படப்பிடிப்பு சமயத்தில் தானும் - கமல் இணையும் படத்திற்கு நெல்சனிடம் கதை கேட்டிருக்கிறார் ரஜினி. அவர் சொன்ன கதை பிடித்துவிட, அதையே லாக் செய்திருக்கிறார்கள். ஜெயிலர் 2வுக்கு பிறகு ஒரு சின்ன படம் செய்யலாம் என நினைத்த ரஜினி, கமல் தயாரிப்பு, சுந்தர் சி இயக்கம் என படத்தை அறிவித்தார்கள். அறிவிப்பு வெளியான ஒரு வாரத்துக்குளாகவே அப்படத்திலிருந்து தான் வெளியேறுவதாக அறிவித்தார் சுந்தர் சி. பின்னர் அந்தப் படத்திற்கு இயக்குநர் தேடும் படலம் விறுவிறுப்பாக நடைபெற்றது. இறுதியில் அந்த `தலைவர் 173' படத்தை இயக்க சிபி சக்கரவர்த்தி தேர்வானார். 

அதனைத் தொடர்ந்து கடந்த வாரம் ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் படத்திற்கான புரோமோ படப்பிடிப்பு இரண்டு நாட்கள் பிரசாத் ஸ்டூயோவில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து இன்று படத்தின் புரோமோ வீடியோ வெளியிடப்பட்டு உள்ளது. ரெட்ரோ ஸ்டைலில் படத்தின் புரோமோ வடிவமைக்கப்பட, அதற்கு ஏற்ற க்ளாஸிக் ஒளிப்பதிவை ராஜீவ் மேனன் செய்ய, அனிருத் ரெட்ரோ தீமையும் கொடுத்திருக்கிறார். வீடியோவில் ஒருவரை ஒருவர் மிஞ்சும்படி தயாராவதில் துவங்கும் இந்த வீடியோ, யாரு ஹீரோ எனக் கேட்பதோடு ஜாலியாக முடிகிறது. 

Rajini - Kamals Reunion movie promo out now
ரஜினி, கமல்எக்ஸ் தளம்

முன்பு இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனமும் - ரெட் ஜெயண்ட் நிறுவனமும் தயாரிக்கும் எனச் சொல்லப்பட்டது. ஆனால் இப்போது இதிலிருந்து கமல் விலகிக் கொள்ள, ரெட் ஜெயண்ட் இப்படத்தை தனது 17வது படமாக தயாரிக்க உள்ளது. மேலும் இது ரஜினியின் 174வது படமாகவும், கமலின் 238வது படமாகவும், நெல்சனின் 6ஆவது படமாகவும் உருவாக உள்ளது. தற்போது ரஜினி நடித்துள்ள `ஜெயிலர் 2' ஜூன் 10 வரும் எனவும், சிபி இயக்கும் `தலைவர் 173', 2027 பொங்கலுக்கும் வெளியாக உள்ளது. இதற்கடுத்த படமாக 2027 இறுதியிலோ அல்லது 2028ஆம் ஆண்டிலோ இப்படம் வெளியாகலாம் என சொல்லப்படுகிறது. 

Rajini - Kamals Reunion movie promo out now
COOL RETRO SWAG ரஜினி - கமல், நாளை வருகிறது புரோமோ! | Rajini | Kamal

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com