"என் பாத்திரத்திற்கு மிகவும் நெருக்கமாக இருந்தது!" - ரோஜா | Roja | Anbe Diana
பாரி இளவழகன் இயக்கி நடித்துள்ள, `அன்பே டயானா' ஜூலை 17ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் பேசிய நடிகை ரோஜா, “இயக்குநர் பாரி இந்தக் கதையை என்னிடம் சொன்னபோது, என் பாத்திரத்திற்கு மிகவும் நெருக்கமாக இருந்ததுபோல் தோன்றியது. ஆந்திராவிலிருந்து வந்து தமிழ்நாட்டில் செட்டிலானா பெண், தெலுங்கு தமிழ் கலந்து பேசுவார், வீட்டில் அவர்தான் முதன்மை என நினைப்பார், ஆனால் அப்பா, மகன், மக்கள் எல்லோரும் அவரை ஏமாற்றுவார்கள்.
என் வீட்டிலும் அப்படித்தான். ஒவ்வொரு காட்சி நடிக்கும்போதும், என் மகன், மகள், செல்வா எப்படி இருப்போமோ, அது நினைவுக்கு வந்துகொண்டே இருந்தது. இந்தப் படம் மிகவும் ரியலிஸ்டிக் ஆக இருக்கும். இறுதியில் அந்த அம்மா எப்படி மனம் மாறுகிறார் என்பதை கண்ணீர் வரும் அளவு அழுத்தமாக எடுத்திருக்கிறார். கோபி படப்பிடிப்பில் பயங்கர ஜாலியாக இருப்பார். இங்கு வந்து அமைதியாக வணக்கம் வைக்கிறார் நல்ல பையன் மாதிரி. ‘அன்பே டயானா’ முழுக்க முழுக்க குடும்பத்துடன் அமர்ந்து ரசிக்கக்கூடிய பொழுதுபோக்கு திரைப்படம். அனைவரும் திரையரங்குகளில் வந்து இந்தப் படத்தைப் பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும். படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி” என்றார்.

