H Vinoth
H VinothJana Nayagan

இது ரீமேக்கா எனக் குழம்புகிறார்கள்... ஐயா இது தளபதி படம்! - ஹெச் வினோத் | H Vinoth | Jana Nayagan

ஒரு ரீமேக் படமாக இருக்குமா? இல்லை கொஞ்சம் தான் ரீமேக்கா என குழப்பமும் இருக்கிறது.
Published on

விஜய் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கியுள்ள `ஜனநாயகன்' படம் ஜனவரி 9ம் தேதி வெளியாகவுள்ளது. விஜயின் கடைசி படமான இதன் இசை வெளியீட்டு விழா இன்று பிரமாண்டமான முறையில் மலேசியாவிலுள்ள புக்கிட் ஜலீல் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில் படக்குழுவினர் ஹெச் வினோத் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி எனப் பலரும், சிறப்பு விருந்தினர்களாக லோகேஷ் கனகராஜ், அட்லீ, நெல்சன் உள்பட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

H Vinoth
"ராவண மவன் டா..." ஜனநாயகன் மாஸ் பாடல் வரிகளை சொன்ன விவேக் | Jananayagan | Vivek

இந்த நிகழ்வில் பேசிய இயக்குநர் ஹெச் வினோத் "ரெண்டே விஷயம் சொல்லி முடித்துக் கொள்கிறேன். ஜனநாயகன் எப்படி இருக்கும் என நிறைய பேருக்கு சந்தேகம் இருக்கிறது. ஒரு ரீமேக் படமாக இருக்குமா? இல்லை கொஞ்சம் தான் ரீமேக்கா என குழப்பமும் இருக்கிறது. ஒன்று மட்டும் சொல்கிறேன். ஐயா இது தளபதி படம். அதனால் உங்கள் மைண்டில் இருக்கும் டவுட் எல்லாத்தையும் அழித்துவிட்டு வாருங்கள். இது 100 சதவீதம் பொழுதுபோக்கான படம். ஆடி பாடி கொண்டாடவும் விஷயம் இருக்கு, அமைதியா உக்கார்ந்து யோசிக்கவும் விஷயம் இருக்கும்.


அப்பறம் படத்துடைய கடைசி 20 நிமிஷம், விஜய் சாருடைய ஃபேர்வல் வீடியோ இருக்கிறது, அழ வைக்க போறோம் என சிலர் சொல்கிறார்கள். அதெல்லாம் எதுவும் இல்லை. படத்தின் முடிவில் நம்பிக்கை மட்டும் தான் இருக்கிறது. ஏன் என்றால் தளபதிக்கு என்ட் கிடையாது, பிகினிங்  மட்டும் தான்" எனப் பேசினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com