Vivek, Vijay
Vivek, VijayJananayagan

"ராவண மவன் டா..." ஜனநாயகன் மாஸ் பாடல் வரிகளை சொன்ன விவேக் | Jananayagan | Vivek

ஜனநாயகன் படத்தில் ஐந்து பாடல்களை எழுதி இருக்கிறேன். எல்லா பாடல்களையும் அல்லு அர்ஜூன், அட்லீ படப்பிடிப்பு தளத்தில் இருந்துதான் எழுதினேன். இரு படக்குழுவினரின் புரிதலுக்கும் என்னை பணியாற்ற அனுமதித்ததற்கும் நன்றி.
Published on

விஜய் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கியுள்ள `ஜனநாயகன்' படம் ஜனவரி 9ம் தேதி வெளியாகவுள்ளது. விஜயின் கடைசி படமான இதன் இசை வெளியீட்டு விழா இன்று பிரமாண்டமான முறையில் மலேசியாவிலுள்ள புக்கிட் ஜலீல் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில் படக்குழுவினர் ஹெச் வினோத் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி, எனப் பலரும் சிறப்பு விருந்தினர்களாக லோகேஷ் கனகராஜ், அட்லீ, நெல்சன் உள்பட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

Vivek
Vivek

இந்த நிகழ்வில் பேசிய பாடலாசிரியர் விவேக், "ஜனநாயகன் படத்தில் ஐந்து பாடல்களை எழுதி இருக்கிறேன். எல்லா பாடல்களையும் அல்லு அர்ஜூன், அட்லீ படப்பிடிப்பு தளத்தில் இருந்துதான் எழுதினேன். இரு படக்குழுவினரின் புரிதலுக்கும் என்னை பணியாற்ற அனுமதித்ததற்கும் நன்றி. நான் பாடல்கள் மூலம் அவரை Elevate செய்யவில்லை. அவரே Elevation தான்! இந்தப் படத்தில் நான் எழுதியிருக்கும் மற்றுமொரு Elevation பாடலும் வரவிருக்கிறது. அடுத்தாக `ராவண மவன் டா' என்ற பாடல் ஒன்று வர இருக்கிறது. அது பயங்கர எலிவேஷன் பாடலாக இருக்கும்.

அந்த வரிகளை பாடலாகவே பாடியவர், 

"ராவண மவன் டா, ஒத்தையில் நிக்கிற எமன்டா
அத்தனை பிம்பமும் அவன்டா, உலகாண்டவன்டா
வா வந்து தொடுடா, குத்திட்டு ரத்தமும் வருன்டா
குத்துற கொம்பனும் எவன்டா, ஒளி போன்றவன்டா
வசனமா எழுதலாம், அவன் கத அதுக்கெல்லாம் மேல
எதிரியா அனுப்புனா சிரிக்கிறான், பழகிட்டான் போல
கோடி மாலைகள் நீயும் எங்கு போன போதும்
போகும் வழியே எங்க விழியே மழையா தெறிக்கும்
தந்த சந்தோசம் நாங்க நன்றி சொல்லும் நேரம்
எங்க மனமே உன்ன தினமே ஒரு கனவா சுமக்கும்"
எனக் குறிப்பிட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com