\
Ajithkumar
AjithkumarGladiators - In Pursuit of Challenges

"அதில் ரீ-டேக்கே கிடையாது.." - அஜித் ஆவணப்படம் குறித்து சொன்ன இயக்குநர் விஜய் | Ajith

இது அஜித் சாரின் பெரிய கனவு மற்றும் தொலைநோக்கு பார்வை. இது ஒரு சுலபமான விஷயம் கிடையாது.
Published on
Summary

அஜித் குமார் கார் ரேஸிங் கனவை மையமாகக் கொண்டு, இயக்குநர் விஜய் உருவாக்கும் ‘Gladiators - In Pursuit of Challenges’ ஆவணப்படம் முழுக்க நிஜ காட்சிகளால் நிரம்பியதாக இருக்கும் என கூறப்படுகிறது. ரீ-டேக் இல்லாமல், மோட்டார் ஸ்போர்ட்டின் சவால்கள், இந்தியா இந்த துறையில் உலகளவில் பிரபலமாக வேண்டும் என்ற அஜித்தின் நோக்கம், பெரிய தொழில்நுட்பக் குழுவின் உழைப்பு ஆகியவை வலியுறுத்தப்படுகின்றன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார். நடிப்பு தாண்டி தற்போது கார் ரேஸில் தீவிரமாக இயங்கி வருகிறார். அவரது ரேஸ் பயணம் பற்றிய ஆவணப்படம் ஒன்றையும் தயார் செய்து வருகிறார் அஜித். Gladiators - In Pursuit of Challenges என்ற இந்த ஆவணப்படம் இயக்குநர் விஜய் இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் இசையில் தயாராகி வருகிறது.

சமீபத்திய விருது விழா ஒன்றில் இந்த ஆவணப்படம் பற்றி விஜய் கூறுகையில் "சாருடைய கார் ரேஸ் டாக்குமெண்டரி செய்து கொண்டிருக்கிறோம். இது அஜித் சாரின் பெரிய கனவு மற்றும் தொலைநோக்கு பார்வை. இது ஒரு சுலபமான விஷயம் கிடையாது. மோட்டார் ஸ்போர்டில் ரேஸிங் என்பது சாதாரண விஷயம் இல்லை. இந்தியா மோட்டார் ஸ்போர்ட்டுக்கு பிரபலமாக வேண்டும் என்பதற்காக அர்ப்பணிப்போடு பணியாற்றுகிறார்.

Ajithkumar
’இந்தப் படத்தை கொண்டாட முடியவில்லை..’ - வைரலாகும் ஜனநாயகன் பட நடிகை கருத்து!

அவர் செய்யும் விஷயத்துக்காக ஒவ்வொரு இந்தியரும் பெருமை கொள்வோம். இதற்காக பெரிய குழு பணியாற்றி வருகிறது. இந்த டாக்குமெண்டரி வரும் போது, இதற்காக ஒரு குழுவே எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பது புரியும். குறிப்பாக அஜித் சார். இது சுலபம் கிடையாது, எல்லாமே நிஜமாக நடக்கும். ரீ-டேக் என்பதே கிடையாது. அந்த நிஜமான உலகத்தை விரைவில் பார்ப்பீர்கள். அது எப்போது வெளியாகும் என அஜித் சார் சீக்கிரமே அறிவிப்பார்." என்றார்.

Ajithkumar
’கர்ணன், புதுப்பேட்டை போன்ற படங்களுக்கு தேசிய விருது கிடைக்கலயே..’ ராயன் குறித்து மனம்திறந்த தனுஷ்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com