’இந்தப் படத்தை கொண்டாட முடியவில்லை..’ - வைரலாகும் ஜனநாயகன் பட நடிகை கருத்து!
‘ஜனநாயகன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ரேச்சல் ரெபேக்கா, மாணவர் போராட்டம் நடந்துகொண்டிருந்த நேரத்தில் படம் வெளியானதால் அதை முழுமையாக கொண்டாட முடியவில்லை என்கிறார். மனம் முழுவதும் போராட்டத்தில் இருந்ததால், முதலமைச்சரின் முதல் படம் என்ற பார்வையின்றி, சாதாரண நடிகரின் படமாகவே பார்த்ததாகவும், தன் கதாபாத்திரங்கள் பெண்களின் அனுபவங்களையும் கருத்துகளையும் பிரதிபலிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறார்.
`கடைசி விவசாயி', `குட் நைட்', `மெய்யழகன்', `தாய்க்கிழவி' போன்ற படங்களில் முக்கியமான பாத்திரத்தில் நடித்தவர் ரேச்சல் ரெபேக்கா. இப்போது வெளியாகியுள்ள `ஜனநாயகன்;' படத்திலும் முக்கியமான பாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார். சமீபத்தில் ஜனநாயகன் வெளியீடு குறித்து தனது கருத்தை பதிவு செய்திருக்கிறார். அந்த கருத்து இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரேச்சல் பேசிய போது "போராட்டம் நடந்து கொண்டிருந்த சமயத்தில் இந்தப் படம் வெளியானதால் என்னால் முழுதாக கொண்டாட முடியவில்லை. மனது முழுக்க மாணவர்களின் போராட்டத்தில் இருந்தது. எனவே இந்தப் படத்தை கொண்டாடவோ, அனுபவிக்கவோ முடியவில்லை. மேலும் இதில் நடித்த போது அவர் நடிகர் தான். முதலமைச்சரின் முதல் படம் என்று என்னால் பார்க்க முடியவில்லை.
நான் நடிக்கும் படங்களின் மூலம் எதோ ஒரு கருத்தை சொல்ல வேண்டும் என நினைக்கிறேன். என்னை பார்த்து நிறைய பெண்கள் ரிலேட் செய்கிறார்கள். அவர்களை பிரதிபலிக்கும் படங்களாக, அவர்களுக்கு தேவையான கருத்துக்களை பேசும் படங்களாக நடிப்பேன். உளவியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் அப்படியான கருத்துக்கள் அடங்கிய படங்களை தேடி நடிப்பேன். குறிப்பாக பெண்களை மையப்படுத்தி ஆழமான விஷயங்களை சொல்லும் படங்களில் நடிக்க ஆசை." என்றார்.

