TR, Sai Dhanshika
TR, Sai DhanshikaVishal

"தன்ஷிகாவை பாதித்த அந்த பேச்சு..." - விஷால் பகிர்ந்த சம்பவம் | Vishal | Sai Dhanshika

அந்த சமயத்தில் அவர் மிகவும் மன ரீதியாக சோர்வானார். அப்போது என்னுடைய அலுவலகம், அவர் தங்கி இருந்த அப்பார்ட்மென்டுக்கு பின் பக்கம் இருந்தது. அவர் வீட்டில் இருக்கிறாரா என கேட்டுவிட்டு நேரில் சென்றேன்.
Published on

விஷால் தற்போது தான் இயக்கி நடிக்கும் `மகுடம்' படத்தின் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். நடிப்பு, தயாரிப்பு என இயங்கி வரும் விஷால் தற்போது புதிய அவதாரத்தை கையில் எடுத்திருக்கிறார். அதுதான் Yours Frankly Vishal! என்ற பாட்காஸ்ட். இந்த வீடியோ பாட்காஸ்டின் முதல் எப்பிசோட் கடந்த மாதம் வெளியானது. அதில் பல விஷயங்களை பகிர்ந்திருந்தார். தற்போது அதன் இரண்டாம் பாகம் வெளியானது. இதில் தன் வருங்கால மனைவி தன்ஷிகா பற்றியும், மறக்க முடியாத  Fan Moment பற்றியும் பகிர்ந்துள்ளார்.

தன்ஷிகா பற்றி கூறுகையில் "ஒருமுறை டி ஆர் அவர்கள், தன்னுடைய பெயரை சொல்லவில்லை என ஒரு மேடையில் தன்ஷிகாவை அவமானப்படுத்தி பேசினார். அருகில் இருந்த வெங்கட்பிரபு, கிருஷ்ணா, விதார்த் உட்பட பலரும் சிரித்தார்கள். அந்த சமயத்தில் அவர் மிகவும் மன ரீதியாக சோர்வானார். அப்போது என்னுடைய அலுவலகம், அவர் தங்கி இருந்த அப்பார்ட்மென்டுக்கு பின் பக்கம் இருந்தது. அவர் வீட்டில் இருக்கிறாரா என கேட்டுவிட்டு நேரில் சென்றேன். இதெல்லாம் தன்ஷிகா நினைவு வைத்திருந்து என்னிடம் கூறினார். ஏன் அழுகிறாய்? எனக் கேட்டு அரைமணிநேரம் எனக்கு ஆறுதலாக பேசினீர்கள் எனக் கூறினார். நான் அப்போது அவரிடம் இதெல்லாம் பெரிய பிரச்னை இல்லை. இதனை மனதில் ஏற்றிக் கொள்ளாதே. இப்படி நடப்பது சகஜமானதுதான் எனப் பேசினேன்" என்றார்.

TR, Sai Dhanshika
`சிவா உங்களுக்கு ஹீரோ ரோல் செட் ஆகாது'னு.. - சினிஷை கலாய்த்து தள்ளிய சிவா | SK | Sinish

மறக்க முடியாத Fan Moment என்ன எனக் கேட்கப்பட "என்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என பெண்கள் வந்து கேட்பதுதான். அது சரியானதல்ல. நீங்கள் பார்க்கும் விஷால் வேறு, அது திரையில் பார்க்கும் விஷால். அதை பார்த்து திருமணம் செய்யலாம் என முடிவு எடுப்பது பைத்தியக்காரத்தனமானது. சமீபத்தில் ஒரு பெண் ரத்தத்தால் என் முகத்தை வரைந்து எடுத்து வந்து, என்னை திருமணம் செய்ய வேண்டும் என்றார். நான் உடனே நீங்கள் இங்கிருந்து சென்றுவிடுங்கள் எனக் கூறினேன். இப்படியான விஷயங்களை ஊக்கப்படுத்த முடியாது" என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com