Suriyas Vishwanath & Sons first look out now
SuriyaVishwanath & Sons

சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ வெளியானது ஃபர்ஸ்ட் லுக்! | Suriya | Vishwanath & Sons

இப்படத்தில் மமிதா பைஜு, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள்  இணைந்து நடித்துள்ளனர்.
Published on

சூர்யா நடிப்பில் வெங்கி அட்லூரி இயக்கியுள்ள படம், `சூர்யா 46'. இப்படத்தில் மமிதா பைஜு, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள்  இணைந்து நடித்துள்ளனர். ‘வாத்தி’ மற்றும் ‘லக்கி பாஸ்கர்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இப்படத்தை இயக்கியுள்ளார் என்பதால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இன்று இப்படத்தின் தலைப்பு ‘விஸ்வநாத் & சன்ஸ்’ என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. சூர்யா ஒரு  குழந்தையுடன் வருமாறு உள்ள போஸ்டர்மூலம் இது ஓர் உணர்ச்சிபூர்வமான குடும்பக் கதையாக இருக்கும் என்பது புரிகிறது. இப்படத்திற்கான இசையை ஜி.வி.பிரகாஷ் குமார் அமைத்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவுபெற்ற நிலையில், வருகிற ஜூலை மாதம் உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகத் தயாராகி வருகிறது. இப்படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Suriyas Vishwanath & Sons first look out now
மூன்றாவது முறை இணைந்த விஜய் சேதுபதி - மணிகண்டன் கூட்டணி! | Muthu Engira Kaattaan | Vijay Sethupathi

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com