Manikandan and Vijay Sethupathi joins in Muthu Engira Kaattaan
Manikandan, Vijay SethupathiMuthu Engira #Kaattaan

மூன்றாவது முறை இணைந்த விஜய் சேதுபதி - மணிகண்டன் கூட்டணி! | Muthu Engira Kaattaan | Vijay Sethupathi

வெட்டப்பட்ட தலை முத்துவுடையது. யார் இந்த முத்து? அவனது உடல் எங்கே என்ற தேடல்தான் இந்த சீரிஸின் கதைக்களம்.
Published on

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சீரிஸ், `முத்து என்கிற காட்டான்' வெப் சீரிஸ். இதன் டீசர் சமீபத்தில் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. மார்ச் 27ஆம் தேதி, இந்த சீரிஸ் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாக உள்ளது.

`ஆண்டவன் கட்டளை', `கடைசி விவசாயி' படங்களுக்குப் பிறகு இந்த சீரிஸ் மூலம் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் இயக்குநர் M.  மணிகண்டனின் மேஜிக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. மேலும் இந்த சீரிஸில் பாலிவுட் நடிகர் மிலிந்த் சோமன், சுதேவ் நாயர், இர்ஷாத் அலி, ரிஷா ஜேகப்ஸ், கலைவாணி பாஸ்கர், சிங்கம்புலி, முத்துக்குமார், பாலாஜி சக்திவேல், வடிவேல் முருகன், VJ பார்வதி, அபி நக்ஷத்ரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மூன்று வருடமாக புகார் ஏதும் வராததால், மூடப்படும் தருவாயில் இருக்கும் ஒரு சிறிய கிராமத்தின் காவல் நிலையம், ஒரு மனிதனின் வெட்டப்பட்ட தலையால் பரபரப்பாகிறது. வெட்டப்பட்ட தலை முத்துவுடையது. யார் இந்த முத்து? அவனது உடல் எங்கே என்ற தேடல்தான் இந்த சீரிஸின் கதைக்களம். விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜியோ ஹாட்ஸ்டார் ஒரிஜினல்ஸ் படைப்பாக தவரிக்கப்பட்டு, இயக்குநர் மணிகண்டன் தலைமையில் உருவாகியுள்ள இந்த சீரிஸை,  B.அஜித் குமார் மற்றும் M. மணிகண்டன் இணைந்து இயக்கியுள்ளனர்.

Manikandan and Vijay Sethupathi joins in Muthu Engira Kaattaan
`சேயோன்' முருகனுக்கு எதிரான கதையா? - சிவக்குமார் முருகேசன் விளக்கம் | Seyon | Sivakumar Murugesan

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com