\
Suriya's Karuppu movie ott release date
SuriyaKaruppu

`கருப்பு' ஓடிடி ரிலீஸ் எப்போது? வெளியான அறிவிப்பு | Karuppu | Suriya

தமிழ்நாட்டில் மட்டும் 175 கோடிக்கு அதிகமாக வசூல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் 300 கோடி வசூல் தாண்டும் என சொல்லப்படுகிறது.
Published on

சூர்யா நடிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ள படம் `கருப்பு'. இப்படத்தில் த்ரிஷா, ஸ்வாசிகா, ஷிவதா, இந்திரன்ஸ் எனப் பலர் நடித்துள்ளனர். மே 15ம் தேதி வெளியான படத்துக்கு பெரிய வரவேற்பு கிடைத்து அசத்தி வருகிறது. வசூலிலும் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் 175 கோடிக்கு அதிகமாக வசூல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் 300 கோடி வசூல் தாண்டும் என சொல்லப்படுகிறது.

படம் வெற்றியடைந்ததையடுத்து இயக்குநர் ஆர் ஜே பாலாஜி பல மாவட்டங்களில் உள்ள திரையரங்குகளுக்கு சென்று ரசிகர்களின் வரவேற்பை பார்த்தார். மதுரையில் பதினெட்டாம்படி கருப்பு கோவிலுக்கு சென்று அரிவாள் சாத்தினார். சூர்யாவும் படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மதுரையில் பதினெட்டாம்படி கருப்பு கோவிலுக்கு சென்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார்.

இன்றோடு படம் வெளியாகி 25 நாட்களை கடந்துள்ள நிலையில், படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி ஜூன் 12ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது `கருப்பு'. இதனையடுத்து சூர்யா நடிப்பில் வெளியாகவுள்ள `விஸ்வநாத் & சன்ஸ்' மற்றும் `சூர்யா 47' படங்கள் மேலும் பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

Suriya's Karuppu movie ott release date
தொடர்ந்து இரவுநேர படப்பிடிப்பு.. தீவிர கவனம் செலுத்தும் சிம்பு.. ‘அரசன்’ Updates!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com