\
Arasan
ArasanPT

தொடர்ந்து இரவுநேர படப்பிடிப்பு.. தீவிர கவனம் செலுத்தும் சிம்பு.. ‘அரசன்’ Updates!

இரண்டு மாதங்களுக்கும் மேலாக தொடர்ச்சியான இரவு நேர படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகிறார் சிலம்பரசன்.
Published on

நடிகர் சிலம்பரசன் TR, தனது அடுத்த பிரம்மாண்ட திரைப்படமான ‘அசுரன்’ படத்திற்காக கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக தொடர்ச்சியாக இரவு நேர படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகிறார். சென்னையில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான அரங்கில் தற்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தனது கதாபாத்திரத்திற்காக முழு அர்ப்பணிப்புடன் உழைத்து வரும் சிலம்பரசன் TR, படத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

Arasan Shooting spot
Arasan Shooting spot web

தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இப்படம், மிகப்பெரிய அளவில் உருவாகி வருகிறது ஒவ்வொரு கட்டத்திலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். படக்குழுவும் திட்டமிட்ட காலக்கெடுவுக்குள் பணிகளை நிறைவு செய்யும் நோக்கில் இடைவிடாது உழைத்து வருகிறது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அசுரன், ரசிகர்களுக்கு விருந்தாக இந்த தீபாவளிக்கு வெளியாகும் வகையில் திட்டமிட்டபடி முன்னேறி வருகிறது. மேலும் பல முக்கிய அப்டேட்கள் விரைவில் வெளியாகவுள்ளன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com