சாய் அப்யங்கரின் 5வது INDI பாடல் வெளியானது! | Pavazha Malli | Sai Abhyankkar
இந்திய சினிமாவின் தற்போதைய கவனத்தை குவித்துள்ள இளம் இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் தான். `கட்சி சேர' பாடல் ஹிட்டுக்குப் பிறகு பெரிய அளவில் பாராட்டுகளை பெற்றவர், `ட்யூட்' படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி பெரிய வரவேற்பை பெற்றார். அடுத்தாக சூர்யாவின் கருப்பு, அல்லு அர்ஜூன் - அட்லீ கூட்டணியில் உருவாகும் படம் என படு பிசியாக இருக்கிறார்.
சினிமாவில் பிரபலமாகும் முன்பு சாய் அப்யங்கர் தனது தனியிசை பாடல்கள் மூலம் மிகவும் பிரபலமானார். அவரின் `கட்சி சேர', `ஆச கூட', `சித்திர புத்திரி', `விழி வீக்குற' போன்ற பாடல்கள் பெரிய ஹிட்டானது. சினிமாவில் ஒரு பக்கம் பிசியாக இருந்தாலும், தன்னுடைய இன்டிபென்டன்ட் பாடல்களை வெளியிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார் சாய் அப்யங்கர். அதன் படி தனது ஐந்தாவது இண்டிபெண்டண்ட் பாடலான `பவழ மல்லி' பாடலை இன்று வெளியிட்டுள்ளார். இன்று மாலை இதன் வீடியோ பாடல் வெளியாகவுள்ளது. இப்பாடலில் சாயுடன் சேர்ந்து ஸ்ருதிஹசானும் பாடியுள்ளார். பாடலை விவேக் எழுதியுள்ளார்.
அடுத்ததாக ராகவா லாரன்ஸ் - நிவின் பாலி நடிக்கும் `பென்ஸ்', தனுஷ் - ராஜ்குமார் பெரியசாமி கூட்டணியில் உருவாகும் `D55', கார்த்தி - தமிழ் கூட்டணியில் உருவாகும் `மார்ஷல்' போன்ற படங்களும் சாய் அப்யங்கர் இசையில் தான் உருவாக்கவுள்ளது.

