நடிகர்களுக்கு ரெட் கார்டா? - தென்னிந்திய நடிகர்கள் சங்கம் விளக்கம்!

திரைப்படத் தயாரிப்பாளர்கள் உடனான பிரச்னை பேசித் தீர்க்கப்படும் என தென்னிந்திய நடிகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நடிப்பதற்காக முன்தொகை வாங்கிக்கொண்டு தயாரிப்பாளர்களுக்கு ஒத்துழைக்காத சில நடிகர்களுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் ரெட் கார்டு பிறப்பிக்கும் என தகவல்கள் வெளியான நிலையில், பிரச்னை குறித்து விளக்கமளிக்கும் வகையில் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி சில தயாரிப்பாளர்கள் மீது நடிகர்களும் புகார் தெரிவித்துள்ளதாகவும், பிரச்னை இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு முன் உண்மைக்குப் புறம்பான செய்திகளைப் பரப்ப வேண்டாம் எனவும் தென்னிந்திய நடிகர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com