Suriya's Karuppu movie third single out now
SuriyaKaruppu

சூர்யாவின் `கருப்பு' பட மூன்றாவது பாடல் வெளியீடு! | Suriya | Karuppu | R J Balaji

இப்படத்தின் முதல் சிங்கிள் God Mode கடந்த ஆண்டு அக்டோபரில் வெளியானது. அதனை தொடர்ந்து இரண்டாவது சிங்கிளாக `நாங்க நாலு பேரு' பாடல் கடந்த மாதம் வெளியானது.
Published on

சூர்யா நடிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கிவரும் படம் `கருப்பு'. இப்படத்தில் த்ரிஷா, ஸ்வாசிகா, ஷிவதா, இந்திரன்ஸ், யோகிபாபு எனப் பலர் நடித்துள்ளனர். சாய் அப்யங்கர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் டீசர் சூர்யா பிறந்தநாளான கடந்த ஆண்டு ஜூலை 23ஆம் தேதி வெளியானது.

இப்படத்தின் முதல் சிங்கிள் God Mode கடந்த ஆண்டு அக்டோபரில் வெளியானது. அதனை தொடர்ந்து இரண்டாவது சிங்கிளாக `நாங்க நாலு பேரு' பாடல் கடந்த மாதம் வெளியானது. இப்பாடலை நடிகர் சிம்பு பாடியிருந்தார். இதனை தொடர்ந்து இப்படத்தின் அடுத்த பாடலாக `ராத்து ராசன்' இன்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியிட்டுள்ளனர்.

பெரிய எதிர்பார்ப்பிலிருக்கும் இந்தப் படம், கடந்த ஆண்டு தீபாவளிக்கே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் தள்ளிப்போனது. இப்போது இந்தப் படம் கோடை வெளியீடாக மே 14ஆம் தேதி வெளியிட உள்ளனர். இதனை தொடர்ந்து வெங்கி அட்லுரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள `விஸ்வநாத் & சன்ஸ்' படம் ஜூலை மாதம் வெளியாகவுள்ளது. அடுத்து ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகிவரும் `சூர்யா 47' படம் தயாராகி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com