Simbus Silambattam gearing up for rerelease
STRSilambattam

ரீ-ரிலீஸ் ஆகும் சிம்புவின் `சிலம்பாட்டம்' | STR | Silambattam

இரட்டை வேடங்களில் சிம்பு நடித்து வெளியான `சிலம்பாட்டம்', பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. 18 வருடங்கள் கழித்து இப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
Published on

சிம்பு, சனா கான், சந்தானம், சினேகா, கிஷோர் நடித்து 2008இல் வெளியான படம் `சிலம்பாட்டம்'. இரட்டை வேடங்களில் சிம்பு நடித்து வெளியான இது பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. 18 வருடங்கள் கழித்து இப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

STR
STR

பிப்ரவரி 3ஆம் தேதி சிம்புவின் பிறந்தநாள் வருகிறது. அதனை கொண்டாடும் விதமாக அவரது பிறந்தநாள் வாரத்தில் பிப்ரவரி 6ஆம் தேதி இப்படம் ரீ ரிலீஸ் ஆகவுள்ளது. ஆக்‌ஷன், காமெடி என தரமான பொழுதுபோக்கு படமாக பலரையும் கவர்ந்தது.

Simbus Silambattam gearing up for rerelease
”பின்னணிப் பாடகராக தொடரப் போவதில்லை!” - ஓய்வை அறிவித்த அரிஜித் சிங் | Arijit Singh

மேலும் யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள், ’நலந்தானா’, ’வெச்சுக்கவா’ பாடல்களின் ரீமிக்ஸ் எல்லாமும் கொண்டாட்டமுமாக அமைந்தன. இன்றைய டிஜிட்டல் காலத்திற்கு ஏற்ப, மேம்படுத்தப்பட்ட ஒலி, படத்தரத்தில், புத்தம் புதுபொலிவுடன் இந்த படம் மீண்டும் திரைக்கு வரவிருக்கிறது.

நடிகர் சிம்பு
நடிகர் சிம்புpt desk

கடந்த ஆண்டு வெளியான கமல்ஹாசனின் `தக்லைஃப்' படத்தில் ஒரு பாத்திரத்தில் நடித்திருந்தார் சிம்பு. அதன் பிறகு அவர் நடிப்பில் எந்தப் படமும் வராமலே இருந்தது. இப்போது வெற்றிமாறன் இயக்கத்தில் அவர் நடித்து வரும் `அரசன்' பட வெளியீடும் எப்போது என தெரியாத நிலையில், சிம்புவின் இந்தப் படமும் அடுத்து வெளியாகாத நிலை உருவாகியுள்ளது. எனவே இந்தச் சூழலில் `சிலம்பாட்டம்' ரீ ரிலீஸ் ஆவது அவரது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தைக் கூட்டியுள்ளது.

Simbus Silambattam gearing up for rerelease
ஷூட்டை நிறுத்திவிட்டு `மங்காத்தா' பார்க்க வந்த சிம்பு - வைரலாகும் பழைய வீடியோ! | Simbu | Mankatha

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com