Sasikumar's upcoming films
SasikumarVadhandhi

சசிகுமார் செம பிஸி.. அடுத்தடுத்து ரெடியாகும் படங்கள்! | Sasikumar | Vadhandhi 2

`லீலை', `கொலைகாரன்' படங்களை இயக்கிய ஆண்ட்ரூ லூயிஸ் 'வதந்தி - தி ஃபேபிள் ஆஃப் வெலோனி' வெப்சிரீஸ் மூலம் கவனம் ஈர்த்தார். தற்போது `வதந்தி 2' வெப் சீரிஸ் சசிகுமார் நடிப்பில் உருவாகியிருக்கிறது.
Published on

தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான படத்திலேயே நடிகராகவும் அறிமுகமாகி இப்போது முழுநேர நடிகராக பிஸியாக இருப்பவர் சசிகுமார். சமீபத்தில் இவர், ராஜூ முருகன் இயக்கத்தில் நடித்த `மை லார்ட்' படம் வெளியானது. அடுத்ததாக இவர் கையிலிருக்கும் கமிட்மென்ட் எல்லாம் கேட்டால் கோலிவுட்டின் பிஸி நடிகர் இவர்தான் என்பதுபோல இருக்கிறது.

`லீலை', `கொலைகாரன்' படங்களை இயக்கிய ஆண்ட்ரூ லூயிஸ்  'வதந்தி - தி ஃபேபிள் ஆஃப் வெலோனி' வெப்சிரீஸ் மூலம் கவனம் ஈர்த்தார். தற்போது `வதந்தி 2' வெப் சீரிஸ் சசிகுமார் நடிப்பில் உருவாகியிருக்கிறது.  சில வாரங்களுக்கு முன் இதன் டீசர் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இந்த வெப்சீரீஸும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் ஆண்டனியின் 'சலீம்' படத்தை இயக்கிய நிர்மல் குமாரின் இயக்கத்தில் 'நா நா' என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார் சசிகுமார். இதில் இன்னொரு ஹீரோவாக சரத்குமாரும் நடித்திருக்கிறார்.

Sasikumar's upcoming films
”விஜய் இன்னும் இரண்டு தலைமுறைக்கு ஆட்சி செய்வார்..”| CM Vijay | R V Udayakumar

அடுத்து 'காவல் துறை உங்கள் நண்பன்' படத்தை இயக்கிய ஆர்.டி.எம். இயக்கத்தில் 'எவிடென்ஸ் #8' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்துவருகிறது. மேலும் அறிமுக இயக்குநர் பாலா அரண் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.

Sasikumar
SasikumarMy Lord

இதுதவிர மீண்டும் ராஜூமுருகன் இயக்கத்தில் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார் சசிகுமார். இப்படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகள் நிறைவடைந்திருக்கிறது. மேலும் `நந்தன்' இயக்குநர் இரா.சரவணன் எழுதிய 'சங்காரம்' நாவலை படித்த சசிகுமார் அதன் நூல் வெளியீட்டு விழாவில் 'சங்கார'த்தின் கதாபாத்திரமான மார்ட்டின் கேரக்டரில் நடிக்க அப்போதே ஒரு துண்டை போட்டு வைத்திருக்கிறார். இதில்லாமல் இயக்குநராக மீண்டும் காலம் இறங்கும் வேலைகளையும் பார்த்து வருகிறார். ஒரு பீரியட் ஃபிலிமான அதன் ஸ்க்ரிப்ட் வேலைகளும் ஒரு பக்கம் நடந்து வருவதாக தகவல்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com