\
Sarathkumar
SarathkumarSSS171

சரத்குமார் நடிக்கும் அடுத்த படங்கள்... வெளியான இரண்டு அறிவிப்பு | Sarathkumar

இது சரத்குமாரின் 171வது படமாக உருவாகவுள்ளது. இந்தப் படத்தை ராகுல் சக்கரவர்த்தி இயக்குகிறார். கதையை விஜய் பார்கவ் எழுதியுள்ளார்.
Published on
Summary

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் சரத்குமார் 72வது பிறந்தநாளை முன்னிட்டு இரண்டு புதிய படங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று அவரது 171வது படமாக உருவாகிறது. பி. எல். தேனப்பன் – பிரெசிடென்ஷியல் மூவீஸ் இன்டர்நேஷனல் இணைந்து வழங்கும் இந்த படத்தை ராகுல் சக்கரவர்த்தி இயக்க, விஜய் பார்கவ் கதை எழுதியுள்ளார். நவம்பர் 15 முதல் படப்பிடிப்பு தொடங்குகிறது.

தமிழ்சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவர் சரத்குமார். இவரது 72வது பிறந்தநாளான நேற்று அவரின் இரண்டு புதிய படங்கள் அறிவிக்கப்பட்டது. இதில் ஒரு படத்தை பி. எல். தேனப்பன் – பிரெசிடென்ஷியல் மூவீஸ் இன்டர்நேஷனல் இணைந்து வழங்குகிறார்கள். இது சரத்குமாரின் 171வது படமாக உருவாகவுள்ளது. இந்தப் படத்தை ராகுல் சக்கரவர்த்தி இயக்குகிறார். கதையை விஜய் பார்கவ் எழுதியுள்ளார்.

navin

பல சகாப்தங்களாக திரைப்படத் தயாரிப்பில் அனுபவம் கொண்ட பி. எல். தேனப்பன் இந்தப் படத்தில் இணைவது படத்தின் மீது எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. இதன் படப்பிடிப்பு நவம்பர் 15 அன்று தொடங்கும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

Sarathkumar
கிறிஸ்டோபர் நோலனின் `The Odyssey' to பாரியின் `அன்பே டயானா'.. இந்த வார ஓடிடி, தியேட்டர் ரிலீஸ்!

இன்னொரு படத்தை ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவான 'கிங்ஸ்டன்' படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் கமல் பிரகாஷ் எழுதி இயக்குகிறார். '2018', 'ரேக்காசித்திரம்' மற்றும் 'மாளிகப்புரம்' போன்ற மலையாளத்தில் பல பிளாக்பஸ்டர் படங்களை தயாரித்த காவ்யா ஃபிலிம் கம்பனி (Kavya Film Company) இப்படத்தை தயாரிக்கிறது. சினிமாவில் குணச்சித்திர, வில்லன் வேடங்களில் நடித்து வரும் சரத்குமார் ஹீரோவாகவும் வரவேற்பை பெறுவதையே இந்த அறிவிப்புகள் காட்டுகின்றன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com