Samuthirakani, Vijay
SamuthirakaniVijay

"இந்த நாளுக்காக தான் காத்திருந்தேன்.." - விஜயை வாழ்த்திய சமுத்திரக்கனி

இந்த தடைகள் எல்லாம் ஒன்றுமே இல்லை சகோதரா. இதைத் தாண்டி பல தடைகளும், பல சிக்கல்களும் உங்களை தேடி வரும்.
Published on

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. காங்கிரஸ், CPM, CPI கூட்டணியுடன் தற்போது 116 என்ற எண்ணிக்கை கிடைத்துள்ளது இன்னும் வி சி க தங்களுடைய கூட்டணி முடிவை அறிவிக்கவில்லை. இந்நிலையில் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சமுத்திரக்கனி, தவெக தலைவர் விஜய்க்கு வாழ்த்து கூறியுள்ளார்.

தமிழ்நாட்டின் முதல்வராகிறார் ஜோசப் விஜய்
தமிழ்நாட்டின் முதல்வராகிறார் ஜோசப் விஜய்web

அதில் "பல தடைகளை தாண்டி தற்போது, ஆட்சி அமைக்க இருக்கும் என் அன்பு சகோதரர் தளபதி மாண்புமிகு தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். இந்த நாளுக்காக தான் காத்திருந்தேன். ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறது.

Samuthirakani, Vijay
"விஜயை வேகமாக முதல்வராக்குங்கள்.." - மன்சூர் அலிகான் கோரிக்கை | Mansoor Ali Khan | Vijay

இந்த தடைகள் எல்லாம் ஒன்றுமே இல்லை சகோதரா. இதைத் தாண்டி பல தடைகளும், பல சிக்கல்களும் உங்களை தேடி வரும். இது எல்லாவற்றையும் உடைத்து எரிந்து ஒரு அற்புதமான ஆட்சியை கொடுத்து இந்த தமிழகத்தை நல்ல நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். வெல்வோம்" எனக் கூறியுள்ளார்.

Samuthirakani, Vijay
ஆளுநரிடம் போலி கடிதம் கொடுக்கவில்லை.. ஆதாரத்தை வெளியிட்ட தவெக.? TTV குற்றச்சாட்டுக்கு மறுப்பு!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com