டிடிவி தினகரன் - விஜய்
டிடிவி தினகரன் - விஜய்pt

ஆளுநரிடம் போலி கடிதம் கொடுக்கவில்லை.. ஆதாரத்தை வெளியிட்ட தவெக.? TTV குற்றச்சாட்டுக்கு மறுப்பு!

தவெக தலைவர் விஜய் குதிரை பேரம் பேசுவதாகவும், தங்களுடைய ஒற்றை எம்எல்ஏ காணவில்லை எனவும் டிடிவி தினரகரன் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
Published on
Summary

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்ற அமமுக மன்னார்குடி எம்எல்ஏ காமராஜ் காணவில்லை என டிடிவி தினகரன் குற்றம் சாட்டிய நிலையில், அவர் தவெகவிற்கு ஆதரவு அளிப்பதாக போலி கடிதம் கொடுக்கப்பட்டதாக கூறினார். ஆனால் காமராஜ் தன் சுயநினைவில் தவெக ஆதரவு கடிதம் எழுதியதாக கூறும் வீடியோ வெளியானதால், தினகரன் குற்றச்சாட்டுக்கு எதிராக தவெக தரப்பில் மறுப்பு வலுப்பெற்றுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியில் இணைந்து அமமுக 11 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், மன்னார்குடி தொகுதி மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. அமமுக வேட்பாளர் காமராஜ் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக முன்னாள் அமைச்சர் டிஆர்பி ராஜாவை 1566 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தார். அதேசமயம், அதிமுக தலைமையிலான கூட்டணி 53 இடங்களை மட்டுமே பெற்று இத்தேர்தலில் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. திமுக கூட்டணி 73 இடங்களை பெற்ற நிலையில், முதன் முறையாக தேர்தலை சந்தித்த தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிபெரும்பான்மை பெற்றிருக்கிறது.

தமிழ்நாட்டின் முதல்வராகிறார் ஜோசப் விஜய்
தமிழ்நாட்டின் முதல்வராகிறார் ஜோசப் விஜய்web

ஆனால் ஆட்சி அமைப்பதற்கான 118 இடங்கள் தவெகவிடம் இல்லை என்பதால், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் உள்ள காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக உள்ளிட்ட கட்சிகளிடம் ஆதரவுகோரியிருந்தது. இதில் காங்கிரஸ், இடதுசாரிகள் ஆதரவு தெரிவித்துவிட்ட நிலையில், இன்னும் விசிக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிடவில்லை. விசிகவின் முடிவு இன்று தெரிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று இரவு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தங்களுடைய மன்னார்குடி காமராஜ் காணவில்லை என்றும், விஜயின் தவெக கட்சி குதிரை பேரம் பேசுவருவதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்தார். மேலும் காமராஜ் தவெகவிற்கு ஆதரவு தெரிவிப்பதாக போலி கடிதம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், கடிதத்தில் காமராஜ் என்பதற்கு பதிலாக காம்ராஜ் என இடம்பெற்றிருப்பதாகவும், இதுகுறித்து காவல்துறையிலும் புகார் அளிக்கப்படும் என்றும் பகிரங்கமாக குற்றச்சாட்டை முன்வைத்தார்.

டிடிவி தினகரன் - விஜய்
தவெக அமைச்சரவையில் இடம்பெறுகிறதா விசிக..? வன்னிஅரசு பதிவால் பரபரப்பு!

ஆதாரத்தை வெளியிட்ட தவெக..

டிடிவி தினகரன் குற்றச்சாட்டுக்கு தவெக தரப்பில் மறுப்பு தெரிவித்திருப்பதாகவும், டிடிவி தினகரன் ஒப்புதல் அளித்துவிட்டதாக சுயநினைவோடு தான் காமராஜ் தவெகவிற்கு ஆதரவு கடிதம் எழுதியதாகவும் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டிருப்பதாக வலம்வருகிறது.

வீடியோவுடன் சொல்லப்பட்டிருக்கும் செய்தியில், “அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் எம்எல்ஏ காமராஜ் அவர்கள் தமிழக வெற்றிக்கழகத்திற்கு ஆதரவளிப்பதாக தன் சுயநினைவுடன் மகிழ்ச்சியுடன் எழுதிய கடிதத்தின் வீடியோ காட்சிகள் தான் இது.

டிடிவி தினகரன் - விஜய்
TVK ஆட்சியமைக்க வெளியிலிருந்து ஆதரவு.. சம்பவம் செய்த இடதுசாரிகள்.. கடந்த கால வரலாறு தெரியுமா?

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் தினகரன் அவர்கள் ஒப்புதலுடன் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவளிப்பதாக அவர் கூறியிருந்தார். ஆனால் அவர் கடிதத்தை எழுதவில்லை என்ற தகவல் பரவி வருவது உண்மைக்கு புறம்பானது மாறானது என்பதை அனைவரும் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டியது அவசியமானது. இவை அனைத்தையும் மறைத்து விட்டு டிடிவி தினகரன் அவர்கள் தவறான செய்திகளை தகவல்களை தெரிவித்து வருகிறார்.

தமிழக வெற்றிக் கழகத்தை பொருத்தவரை யாருடனும் பேரம் பேச வேண்டிய தேவையில்லை என்பதை பொதுமக்கள் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்” என சொல்லப்பட்டுள்ளது. ஆனால் இது தவெக தரப்பில் தான் வெளியிடப்பட்டதா என்பது அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை.

டிடிவி தினகரன் - விஜய்
”எம்.எல்.ஏ-வை காணவில்லை; விஜய் குதிரை பேரம் நடத்துகிறார்” - டிடிவி தினகரன்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com