Samantha, Raj
Samantha, RajMarriage

எளிமையாக முடிந்த சமந்தா திருமணம்... மாப்பிள்ளை யார் தெரியுமா? | Samantha Marriage

`The Family Man: Season 2' மற்றும் `Citadel: Honey Bunny' ஆகிய இரு இணைய தொடர்களில் சமந்தா நடித்தார். இவ்விரு தொடர்களையும் ராஜ் தன் நண்பர் டிகே உடன் இணைந்து இயக்கினார்.
Published on

`பானா காத்தாடி' படம் மூலம் சினிமாவில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் நடித்து வருபவர் சமந்தா. தற்போது இவருக்கும் இயக்குநர் ராஜ் நிடிமொருவுக்கும் இன்று திருமணம் நடைபெற்றுள்ளாது.  சமந்தா - ராஜ் இருவரது காதல் பற்றி கடந்த சில மாதங்களாகவே பாலிவுட் மீடியாக்கள் தெரிவித்து வந்தன. இப்போது இதனை அதிகாரப்பூர்வமாக மாற்றியுள்ளது இந்த ஜோடி.

கோவை ஈஷா மையத்தில் உள்ள லிங்க பைரவி கோவிலில் இன்று அதிகாலை நடைபெற்றுள்ளது சமந்தா - ராஜ் நிடிமொரு திருமணம். நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டதனால், 30 பேர் மட்டுமே இந்நிகழ்வில் பங்கு பெற்றுள்ளனர். 2021ம் ஆண்டு இந்தியில் வெளியான `The Family Man: Season 2' இணைய தொடரில் நடித்திருந்தார் சமந்தா. இந்த தொடரை தன் நண்பர் டிகே உடன் இணைந்து இயக்கினார் ராஜ். மேலும் `Citadel: Honey Bunny' என்ற தொடரிலும் சமந்தா நடித்தார், அதனையும் ராஜ் தன் நண்பர் டிகே உடன் இணைந்து இயக்கினார்.

Samantha, Raj
`தலைவர் 173' இயக்குநர் இவரா? அறிவிப்பு வர தாமதம் ஏன்? | Thalaivar 173 | Rajini | Kamal

இதன் பின்புதான் சமந்தா - ராஜ் இடையிலான நட்பு வலுப்பெற ஆரம்பித்துள்ளது. 2021ல் ராஜ் மற்றும் அவரது மனைவி  ஷ்யாமளிக்கு விவாகரத்து நிகழ்ந்தது. அதன் பின்பு ராஜ் - சமந்தா காதல் கதை துவங்கியது எனவும், பல இடங்களில் இவர்கள் ஜோடியாக வருவதும் அதிகரித்தது எனவும் சொல்லப்படுகிறது. மேலும் தற்போது சமந்தா தயாரித்து நடிக்கும் `மா இன்டி பங்காரம்' படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்விலும் கலந்து கொண்டார் இயக்குநர் ராஜ்.

நேற்று மாலையில் இருந்தே சமந்தா - ராஜ் திருமணம் பற்றிய செய்திகளை வெளியிட்டு வந்தன பாலிவுட் மீடியாக்கள். இந்த சூழலில்தான் இன்று இந்த திருமணம் நடைபெற்றுள்ளது. தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் திருமண புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் சமந்தா. அவருக்கு ரசிகர்களும், பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

2017ம் ஆண்டு நடிகர் நாக சைதன்யா - சமந்தா திருமணம் நடைபெற்றது. பின்பு 2021ல் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். பின்னர் நடிகை சோபிதா துலிபாலாவை நாக சைதன்யா மணந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com