\
Preethi Asrani
Preethi AsraniYYDF

ருத்ரா - ப்ரீத்தி அஸ்ரானியின் `யெல்லோ யெல்லோ டர்டி ஃபெல்லோ' டைட்டில் டீசர் | Preethi Asrani

ஒரு நவீன கால காதலியிடம் மாட்டிக்கொள்ளும் அப்பாவி இளைஞன் சந்திக்கும் பிரச்சனைகளே இப்படத்தின் மையக்கருவாக அமைந்துள்ளது.
Published on
Summary

குறும்பட அனுபவம் கொண்ட விக்கி பாஸ்கர் இயக்குநராக அறிமுகமாகும் `யெல்லோ யெல்லோ டர்டி ஃபெல்லோ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டைட்டில் டீசர் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. AP இண்டர்நேஷனல் சஞ்சய் அர்ஜூன்தாஸ் வாத்வா, விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் விஷ்ணு விஷால் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து, போஸ்ட் புரடக்ஷன் வேகமாக நடைபெறுகிறது. டிரெய்லர், இசை வெளியீடு அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

`ஓஹோ எந்தன் பேபி' படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் ருத்ரா. இவர் அடுத்தாக அறிமுக இயக்குநர் விக்கி பாஸ்கர் இயக்கத்தில் `யெல்லோ யெல்லோ டர்டி ஃபெல்லோ' படத்தில் நடித்துள்ளார். ப்ரீத்தி அஸ்ரானி நாயகியாக நடித்துள்ள இப்படத்தில், ஏஞ்சல் மரியா, மோனிஷா மோகன், கருணாகரன், ஜென்சன் திவாகர், நிகிலா சங்கர், சேத்தன், தேவதர்ஷினி மற்றும் அனுபமா உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

குறும்படங்கள் மற்றும் திரைப்படங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்ட விக்கி பாஸ்கர், இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இன்றைய நவீன கால இளைஞர்களின் காதல் மற்றும் வாழ்க்கை முறையை மையமாகக் கொண்டு,  ஃபீல் குட் கமர்ஷியல் எண்டர்டெயினராக இப்படத்தை உருவாக்கியுள்ளார். ஒரு நவீன கால காதலியிடம் மாட்டிக்கொள்ளும் அப்பாவி இளைஞன் சந்திக்கும் பிரச்சனைகளே இப்படத்தின் மையக்கருவாக அமைந்துள்ளது.

Preethi Asrani
ஜார்ஜ் குட்டி இம்முறை சிக்கினாரா? | த்ரிஷ்யம் 3 விமர்சனம் | Drishyam 3 Review | Mohanlal

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசரும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. AP இண்டர்நேஷனல் சார்பில் சஞ்சய் அர்ஜூன்தாஸ் வாத்வா மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் சார்பில் விஷ்ணு விஷால் ஆகியோர் இப்படத்தை தயாரிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. தற்போது படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்த நிலையில், போஸ்ட் புரடக்சன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. விரைவில் டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

Preethi Asrani
"மலையாள சினிமாவைவிட விரைவாக படம் எடுத்தார் பாண்டிராஜ்!" - ஊர்வசி | Urvashi | Parimala & Co
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com