Rajini's Jailer 2 Shoot Wrapped
RajinikanthJailer 2

ரஜினிகாந்தின் `ஜெயிலர் 2' படப்பிடிப்பு நிறைவு! | Jailer 2 | Rajinikanth | Nelson Dilipkumar

இந்த படப்பிடிப்பில் பல முக்கிய நடிகர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டது. குறிப்பாக, சிறப்புத் தோற்றங்களில் வரும் நடிகர்களின் காம்பினேஷன் காட்சிகள் படமானது எனச் சொல்லப்படுகிறது.
Published on

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கிவரும் படம் `ஜெயிலர் 2'. இதில் ரஜினி உடன் ரம்யா கிருஷ்ணன், மிர்ணா, யோகிபாபு ஆகியோர் நடிக்கின்றனர். சிறப்புத் தோற்றங்களில் சிவராஜ் குமார், மோகன்லால், வித்யா பாலன், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சாரமூடு, மிதுன் சக்ரவர்த்தி, விஜய் சேதுபதி, அன்னா ராஜன் எனப் பலரும் நடிப்பதாகச் சொல்லப்படுகிறது.

இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு எடுக்கப்பட்டு வந்தது. இந்த படப்பிடிப்பில் பல முக்கிய நடிகர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டது. குறிப்பாக சிறப்புத் தோற்றங்களில் வரும் நடிகர்களின் காம்பினேஷன் காட்சிகள் படமானது என சொல்லப்படுகிறது. கிட்டத்தட்ட ஓராண்டுக் காலமாக இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் நடந்துவந்தது. இந்நிலையில் இன்று படப்பிடிப்பு மொத்தமாக நிறைவடைந்தது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

படக்குழுவினர் அனைவருடனும் ரஜினி கேக் வெட்டி படப்பிடிப்பு நிறைவடைந்ததைக் கொண்டாடியுள்ளார்.  `ஜெயிலர் 2' வெளியீடு ஆகஸ்ட் மாதம் இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. ஜெயிலர் 2வுக்கு பிறகு ரஜினி நடிக்கும் படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. ஆனால் இயக்குநர் சிபி சக்கரவர்த்தியா அல்லது அஷ்வத் மாரிமுத்துவா என்பது இன்னும் உறுதியாகவில்லை.

Rajini's Jailer 2 Shoot Wrapped
" 'கருப்பு' படத்தில் பணியாற்றுகிறேன் என ரஹ்மான் சாரிடம் சொன்னேன்!" - சாய் அப்யங்கர் | Sai Abhyankkar

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com