Rajinikanth
RajinikanthCoolie

2026 | அதிகம் தேடப்பட்ட படங்களின் பட்டியலில் ரஜினியின் `கூலி' | Coolie | Rajinikanth

படத்திற்கு நிறைய எதிர்மறையான விமர்சனங்களே கிடைத்தன. ஆனாலும் இப்படத்தின் மீதிருந்த எதிர்பார்ப்பு எவ்வளவு என்பது கூகுள் வெளியிட்ட பட்டியலின் மூலம் மேலும் ஒருமுறை அழுத்தமாக தெரிய வந்துள்ளது.
Published on

ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி இந்த வருடம் வெளியான படம் `கூலி'. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு நடுவே வெளியானாலும், படத்திற்கு நிறைய எதிர்மறையான விமர்சனங்களே கிடைத்தன. ஆனாலும் இப்படத்தின் மீதிருந்த எதிர்பார்ப்பு எவ்வளவு என்பது கூகுள் வெளியிட்ட பட்டியலின் மூலம் மேலும் ஒருமுறை அழுத்தமாக தெரிய வந்துள்ளது.

கூகிள் 2025ம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்திய அளவில் அதிகம் தேடப்பட்ட திரைப்பட பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது ரஜினியின் `கூலி'. பட்டியலின் முதல் இடம் பிடித்திருப்பது

Saiyaara
Saiyaara
Rajinikanth
சென்னை திரைப்பட விழாவில் ரஜினியின் `பாட்ஷா' மற்றும் 13 தமிழ் படங்கள்! | CIFF | Rajini | Baashha

இந்தி படமான `சையாரா'. இரண்டாவது இடம் பிடித்திருப்பது கன்னடப்படமான `காந்தாரா லெஜண்ட் சாப்டர் 1'. ஷங்கரின் `கேம் சேஞ்சர்' படம் 8வது இடத்தையும், அனிமேஷன் படமான `Mahavatar Narsimha' 10 இடத்திலும் உள்ளன.

உலகளவில் அதிகம் தேடப்பட்ட படங்களின் பட்டியலில் முதல் இடத்தில் Sean Baker இயக்கத்தில் வெளியாகி ஐந்து ஆஸ்கர் விருதுகளை வென்ற `Anora' இருக்கிறது. அடுத்தடுத்த இடங்களில் `Superman', `Minecraft Movie', `Thunderbolts*', `Sinners', `Happy Gilmore 2', `Final Destination: Bloodlines', `Weapons', `28 Years Later', `Mission: Impossible - The Final Reckoning' ஆகிய படங்கள் இடம்பிடித்துள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com