Rajini
Rajini @sunpictures twitter

‘பகையாகி போனா.. பலியாவ வீணா..’ - ‘ஜெயிலர்’ படத்தின் மூன்றாவது பாடல் ஜுஜுபி வெளியீடு!

‘காவாலா’, ‘ஹுக்கும்’ பாடல்களைத் தொடர்ந்து ‘ஜெயிலர்’ படத்தின் மூன்றாவது பாடலான ‘ஜுஜுபி’ இன்று வெளியிடப்பட்டுள்ளது.

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர்’. ரஜினிகாந்தின் 169 ஆவது படமாக இது உருவாகியுள்ளது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ளார். ‘ஜெயிலர்’ படத்தில் மோகன்லால், ஷிவ் ராஜ்குமார், ஜாக்கி ஜெராஃப், சுனில், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் முதல் பாடலான ‘காவாலா’, இரண்டாம் பாடலான ‘ஹுக்கும்’ ஆகிய பாடல்கள் யூட்யூப் தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், இதனைத் தொடர்ந்து இன்று மூன்றாவது பாடலான ‘ஜுஜுபி’ லிரிக்கல் வீடியோ யூட்யூப் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் பாடலை பாடகி தீ, இசையமைப்பாளர் அனிருத் மற்றும் அனந்த கிருஷ்ணன் ஆகியோர் பாடியுள்ளனர். சூப்பர் சுப்பு பாடல் வரிகளை எழுதியுள்ளார். ‘ஜெயிலர்’ படம், வருகிற ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் வருகிற ஜூலை 28 ஆம் தேதி 4 மணிக்கு இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. இதற்கான அனுமதி சீட்டுகள் 15 நொடிகளில் விற்றுத் தீர்ந்தது குறிப்பிடத்தக்கது.

Rajini
‘அலப்பறை கெளப்பியாச்சு..’-15 நொடிகளில் விற்றுத்தீர்ந்த ‘ஜெயிலர்’ இசை வெளியீட்டு விழா டிக்கெட்கள்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com