‘அலப்பறை கெளப்பியாச்சு..’-15 நொடிகளில் விற்றுத்தீர்ந்த ‘ஜெயிலர்’ இசை வெளியீட்டு விழா டிக்கெட்கள்!

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள ஜெயிலர் படம் வருகிற ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
Jailer
JailerTwitter

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர்’. இப்படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், தெலுங்கு நடிகர் சுனில், நடிகைகள் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், நடிகர்கள் யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்ட ஏராளமானோர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள ‘ஜெயிலர்’ படம், வருகிற ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் முதல் பாடலான காவாலா பாடல் சமீபத்தில் வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலான நிலையில், அதனைத் தொடர்ந்து இரண்டாவது பாடல் ஹுக்கும் வெளியானது.

Jailer
“தலைவரு களத்துல சூப்பர் ஸ்டாரு.. பட்டத்த பறிக்க நூறு பேரு..”-ஜெயிலர் படத்தின் ‘Hukum’ பாடல் வெளியீடு

இப்பாடலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், ‘ஜெயிலர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா அனுமதி சீட்டுகள் அனைத்தும் 15 நொடிகளில் விற்றுத் தீர்ந்துள்ளன.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் வருகிற ஜூலை 28 ஆம் தேதி 4 மணிக்கு ‘ஜெயிலர்’ இசை வெளியீட்டு விழா நடைபெறுகிறது. முன்னதாக இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கான ஆயிரம் அனுமதி சீட்டுகளை இலவசமாக, அதாவது 500 பேர் தலா இரண்டு அனுமதி சீட்டுகள் பெறும் வகையில் அறிவிப்பு ஒன்றை படக்குழு வெளியிட்டு இருந்தது.

இன்று மதியம் 1 மணிக்கு அதற்கான இணையதளத்தில் முதலில் முன்பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுமென படக்குழு தெரிவித்திருந்த நிலையில்தான், அனைத்து விதமான அனுமதி சீட்டுகளும் 15 நொடிகளில் விற்றுத் தீர்ந்துள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com