Hukum Lyric Video
Hukum Lyric VideoYou Tube Video

“தலைவரு களத்துல சூப்பர் ஸ்டாரு.. பட்டத்த பறிக்க நூறு பேரு..”-ஜெயிலர் படத்தின் ‘Hukum’ பாடல் வெளியீடு

ஜெயிலர் படத்தின் முதல் பாடலான ‘காவாலா’ பாடல் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
Published on

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர்’. இப்படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், தெலுங்கு நடிகர் சுனில், கன்னட நடிகர் ஷிவ ராஜ்குமார், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப், தமன்னா, ரெடின் கிங்ஸ்லி, ரம்யா கிருஷ்ணன், விநாயகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்த நிலையில் அண்மையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இதையடுத்து, படத்தின் முதல் பாடலான ‘காவாலா’ பாடல் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. எனினும், அது தமன்னா பாடல் என்று ரசிகர்கள் கூறி வந்த நிலையில், ரசிகர்களின் குறையை போக்கும் வகையில், இப்படத்தின் இரண்டாவது சிங்கிளான ‘Hukum’ பாடல் இன்று வெளியாகியுள்ளது.

முழுமையாக ரஜினிகாந்த் மட்டுமே வரும் வகையில் உள்ள இப்பாடலை அனிருத் இசையமைத்து பாடியுள்ளார். ‘ஜெயிலர்’ படத்தில் ரஜினிகாந்த் ஜெயில் வார்டனாக நடிப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், அதற்கேற்றார்போல், இப்பாடல் துவங்கும்போது ஜெயில் காட்சிகள் காணப்படுகின்றன. சூப்பர் சுப்பு பாடல் வரிகளை எழுதியுள்ளார். ரஜினிகாந்தின் 169 ஆவது படமாக உருவாகியுள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com