"நல்ல கருத்துள்ள பொழுது போக்கு திரைப்படமாக இருக்கும்" - ‘தலைவர் 170’ குறித்து ரஜினி கொடுத்த அப்டேட்!

”170 ஆவது திரைப்படத்தை ஞானவேல் இயக்குகிறார். நல்ல கருத்துள்ள பிரம்மாண்ட பொழுது போக்குத் திரைப்படமாக இருக்கும்” - ரஜினிகாந்த்

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வெளியாகி பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ஜெயிலர். படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து தயாரிப்பாளர் கலாநிதிமாறன் நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு கார்களை பரிசாக அளித்தார்.

ரஜினிகாந்த் அடுத்ததாக இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ‘தலைவர் 170’ திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் நடிப்பவர்களின் பட்டியலை படக்குழு தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது. ரானா, மஞ்சுவாரியார், ரித்திகா சிங், துஷாரா விஜயன் என பலர் நடிக்கின்றனர். அடுத்ததாக லோகேஷ் கனராஜ் இயக்கத்தில் 172 ஆவது திரைப்படத்திற்கான அறிவிப்பும் அண்மையில் வெளியானது.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது 170 ஆவது திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு செல்ல இன்று விமான நிலையம் வந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், “நாளை படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. படத்திற்கு இன்னும் தலைப்பிடப்படவில்லை. ஜெயிலர் திரைப்படம் எதிர்பார்த்ததற்கும் மேல் வெற்றி பெற்றுள்ளது. 170 ஆவது திரைப்படத்தை ஞானவேல் இயக்குகிறார். நல்ல கருத்துள்ள பிரம்மாண்ட பொழுது போக்குத் திரைப்படமாக இருக்கும்” என்றார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com