
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் தலைவர் 170 திரைப்படத்தின் படப்பிடிப்பு, கடந்த 4 ஆம் தேதி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பூஜையுடன் துவங்கியது. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் பணகுடியில் உள்ள ஓடு தொழிற்சாலையில் நேற்று முதல் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
பணகுடியில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக, கன்னியாகுமரியில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கியுள்ள நடிகர் ரஜினிகாந்த், காரில் படப்பிடிப்பு தளத்திற்கு செல்வதை காண காலை முதலே வழிநெடுக மக்கள் பலரும் கூட்டமாக காத்திருந்தனர். இதையடுத்து ரசிகர்களை பார்த்த ரஜினிகாந்த் காரின் மேல் ஏறி நின்று தேர்தல் பரப்புரை போல அனைவருக்கும் வணக்கம் செலுத்தி விட்டுச் சென்றார்.
ரசிகர்கள் தலைவா தலைவா என கோஷமிட்டனர். பலர் தங்களது செல்போனில் படம் பிடித்தனர். தொடர்ந்து நாளையும் படபிடிப்பு நடக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.