கமல் பெயரை முதலில் போட சொன்ன ரஜினி? | Rajinikanth | Kamalhaasan | KH x RK
உச்ச நட்சத்திரங்களான ரஜினிகாந்த் - கமல்ஹாசன் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்குப் பிறகு இணைந்து நடிக்கவுள்ளனர். இப்படத்தின் புரோமோ பிப்ரவரி 21ஆம் தேதி வெளியிடப்பட்டது. ரெட்ரோ ஸ்டைலில் ரஜினி - கமல் தோன்றும் இந்தப் புரோமோ பெரிய வரவேற்பைப் பெற்றது. இப்படம் சார்ந்த ஒரு விஷயம் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
இப்படத்தின் புரோமோ வந்தபோது, அதில் KH x RK என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது முதலில் கமல்ஹாசன் பெயர், இரண்டாவதாக ரஜினிகாந்த் பெயர் எனப் போடப்பட்டது. முதலில் இது ரஜினிகாந்த் பெயர் முதலிலும், கமல்ஹாசன் பெயர் இரண்டாவதாகவும் போடப்பட்டுத்தான் தயார் செய்யப்பட்டதாம். ஆனால், ரஜினி இந்தப் பெயர் வரிசையைப் பார்த்துவிட்டு, "கமல்தான் சீனியர், அவர் பெயர்தான் முதலில் இருக்க வேண்டும்" எனக் கூறி மாற்றச் சொன்னார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது ரஜினிகாந்த், சிபி சக்கரவர்த்தி இயக்கும் படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். இப்படம் குறுகியகால தயாரிப்புதான் என்பதால் பரபரப்பாக இப்படத்தை முடிக்க இருக்கிறார்கள். அடுத்து கமலுடன் இணையும் படத்தை அக்டோபரில் துவங்க இருக்கின்றனர். அடுத்து ரஜினி நடிப்பில் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.
`ஜெயிலர் 2', விடுப்பட்ட சில காட்சிகளும், கேமியோவில் ஒரு முக்கியமான நடிகர் நடிக்கும் காட்சிகளும் எடுக்கப்பட வேண்டியதாக இருக்கிறதாம். படம் ஜூன் 10 வெளியாகும் எனச் சொல்லப்படுகிறது. அடுத்தாண்டு பொங்கலுக்கு தலைவர் 173, தீபாவளிக்கு ரஜினி -கமல் படம் ரிலீஸ் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

